கும்பம் படைத்தல்உணவை அம்மன் முன் குவியலாகக் கொட்டி படைப்பதை கும்பம் படைத்தல் என்பர். [1] கும்பம் என்பதற்கு குவியல் என்பது பொருளாகும். இவ்வழிபாட்டினை கும்பம் போட்டு படைத்தல் என்றும் கூறுவார்கள். [2] கும்பத்தில் இடம்பெறும் பொருட்கள்கொழுக்கட்டை, மாவிளக்கு, புழுங்கள் அரிசி சோறு, கத்தரிக்காய்- கருவாடு சேர்ந்த குழம்பு ஆகியவை கும்பத்தில் இடம்பெறும் பொருளாகும். பூசைசெய்தல்கூழ் ஊற்றுதல் விழா அன்று மாலை இலை அல்லது பாத்திரத்தில் சோறு, குழம்பு இட்டு, அதன்மீது கொழுகட்டையும் அவித்த மாவிளக்ககையும் படையல் வைப்பர். படையலி்ட்டு மாவிளக்கு ஏற்றியபின் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தை வழிபடுவர். கும்பம் கொட்டுதல்கூழ் ஊற்றுதல் விழாவன்று மாலை படைத்த படையலை, அன்று இரவு பத்துமணி முதல் அதிகாலை ஒரு மணிக்குள் வீடுதோறும் மாரியம்மன் கோயிலுக்கு எடுத்துச் செல்வர். கோயிலில் மாரியம்மன் முன் விரிக்கப்பட்டுள்ள வெள்ளைைத் துணி மீது எல்லா சோற்றையும் குவியலாகக் கொட்டி அதன்மீது மாவிளக்கு ஏற்றி வைத்து சூடம் ஏற்றி அம்மனை வழிபடுவர். இவ்வழிபாட்டைதான் கும்பம் படைத்தல் என்பர். உசாத்துணை
ஆதாரங்கள்வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia