குளோரோ அசிட்டால்டிகைடு

குளோரோ அசிட்டால்டிகைடு (Chloroacetaldehyde) என்பது C2H3ClO என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ClCH2CHO என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். தொடர்புடைய சில சேர்மங்களைப் போலவே, இதுவும் அதிக எலக்ட்ரான் நாட்டமுள்ள வினையாக்கியும் ஓர் ஆபத்தான ஆல்க்கைலேற்றும் முகவரும் ஆகும். குளோரோ அசிட்டால்டிகைடு பொதுவாக நீரற்ற வடிவத்தில் காணப்படுவதில்லை, மாறாக அரை அசிட்டாலாகக் காணப்படுகிறது. (ClCH2CH(OH))2O

குளோரோ அசிட்டால்டிகைடு என்பது புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் ஆண்டினோபிளாசுட்டிக்கு ஐபோசுபாமைட்டு என்ற மருந்தின் வளர்சிதை மாற்ற வேதிப்பொருளாகும். மேலும் ஐபோசுபாமைடில் காணப்படும் சில நச்சுத்தன்மைக்கு இது காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தயாரிப்பு

நீரிய வினைல் குளோரைடை குளோரினேற்றம் செய்து நீரேற்ற குளோரோ அசிட்டால்டிகைடைத் தயாரிக்கலாம்.

ClCH=CH2 + Cl2 + H2O → ClCH2CHO + 2 HCl

வினைல் அசிடேட்டிலிருந்து [1] அல்லது அசிட்டால்டிகைடை கவனமாக குளோரினேற்றம் செய்வதன் மூலமும் இதை தயாரிக்கலாம். வினைல் அசிட்டேடை புரோமினேற்றம் செய்வதன் மூலம் தொடர்புடைய புரோமோ அசிட்டால்டிகைடு தயாரிக்கப்படுகிறது. இது ஆல்ககாலின் முன்னிலையில் விரைவாக அசிட்டால்களை உருவாக்குகிறது.[2]

குளோரோஃபார்ம், தொலுயீன் அல்லது கார்பன் டெட்ராகுளோரைடுடன் கொதிநிலை மாறா காய்ச்சி வடித்தல் மூலம் நீரேற்றிலிருந்து நீர் இல்லாத குளோரோ அசிட்டால்டிகைடு தயாரிக்கப்படுகிறது. நீரிலி நிலை குளோரோ அசிட்டால்டிகைடு தலைகீழாக பாலி அசிட்டால்களாக மாறுகிறது..[3]

மேற்கோள்கள்

  1. Jira, Reinhard; Kopp, Erwin; McKusick, Blaine C.; Röderer, Gerhard; Bosch, Axel; Fleischmann, Gerald (2005), "Chloroacetaldehydes", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a06_527.pub2
  2. S. M. McElvain and D. Kundiger "Bromoacetal" Organic Syntheses 1943, volume 23, p. 8. எஆசு:10.15227/orgsyn.023.0008.
  3. Keiji, T (1992-10-30). "α-Chlorocarbonyl Compounds: Their Synthesis and Applications (Commemoration Issue Dedicated to Professor Shigeo Tanimoto On the Occasion of His Retirement)". Bulletin of the Institute for Chemical Research, Kyoto University 70 (3): 341. பன்னாட்டுத் தர தொடர் எண்:0023-6071. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya