குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம்![]() ![]() குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம் (Guantanamo Bay detention camp) என்பது ஐக்கிய அமெரிக்க சட்டமுறைக்குப் புறத்தான தடுப்பு முகாமும் விசாரணை நிலையமும் ஆகும். இது கியூபாவில் அமைந்துள்ள குவாண்டானமோ விரிகுடா கடற்படை முகாமில் உள்ளது. இது 2002 ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் புசு நிர்வாகத்தால் ஆப்கானிசுத்தான் மற்றும் ஈராக் போர்க் கைதிகளை வைக்க என அமைக்கப்பட்டது[1]. இங்கு அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரான பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. முதலாவது கைதி இம்முகாமுக்கு 2002 சனவரி 11 இல் கொண்டு வரப்பட்டார். ஜெனிவா ஒப்பந்தத்தின் மூலமோ அல்லது அமெரிக்கச் சட்டங்களின் மூலமோ பாதுகாப்பைப் பெற முடியாத எதிரிகளையே இந்த முகாமில் தடுத்து வைத்ததாக புஷ் நிர்வாகம் நியாயப்படுத்தி வந்தது. பராக் ஒபாமா 2009 சனவரி 22 இல் ஓராண்டுக்குள் இத்தடுப்பு முகாமை மூடுவேன் என்று வாக்குறுதி வழங்கியிருந்தார்[2][3]. இந்தத் தடுப்பு முகாமில் மிகவும் அதிகமாக 800 பேர்வரை ஒரே நேரத்தில் தடுத்து வைத்திருக்க முடியும். சர்ச்சைதிறக்கப்பட்ட காலம் முதல் குவாண்டநாமோ குடா முகாம் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. ஆரங்சு நிறத்தில் உடையணிந்து, கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் முதலாவது கைதியின் படங்கள் வெளியாகியிருந்த காலம் முதல் அவையும் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia