கெர்டா லெர்னர்
கெர்டா லெர்னர் (Gerda Lerner, ஏப்ரல் 30, 1920 – சனவரி 2, 2013) ஆஸ்திரிய யூத அமெரிக்க வரலாற்றாளரும் எழுத்தாளரும் ஆசிரியருமாவார். விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் மாண்புடை ஓய்வுபெற்ற பேராசிரியையாகவும் டியூக் பல்கலைக்கழகத்தில் வருகை கல்வியாளராகவும் விளங்குகிறார். லெர்னர் பெண்களின் வரலாறு என்ற துறையை நிறுவியவர்களில் ஒருவராவார். அமெரிக்க வரலாற்றாளர்களின் அமைப்பின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். பெண்கள் வரலாறு பாடத்திட்டத்தினை வடிவமைக்க முக்கியப் பங்காற்றினார். முதல் பெண்கள் வரலாற்று வகுப்பினை 1963இல் சமூக ஆய்விற்கான புதுப்பள்ளியில் நடத்தினார். இத்தகைய பாடதிட்டங்களை இலாங் தீவு பல்கலைக்கழகத்திலும் (1965–1967), சாரா லாரன்சு கல்லூரியிலும் (1968 - 1979) கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் நிறுவினார். சாரா லாரன்சு கல்லூரியில் நாட்டில் முதல்முறையாக பெண்கள் வரலாற்றில் பட்டப்படிப்பு திட்டத்தை நிறுவினார். 1980 முதல் விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தின் மேடிசன் வளாகத்தில் இராபின்சன் எட்வர்ட்சு பேராசிரியையாக உள்ளார். தவிரவும் தனது கணவர் கார்ல் லெர்னரின் பிளாக் லைக் மி என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.[1] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia