கேரள மத்திய பல்கலைக்கழகம்
![]() கேரள மத்திய பல்கலைக்கழகம் (Central University of Kerala) என்பது இந்தியப் பாராளுமன்றத்தால் மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம் 2009 (2009 ஆம் ஆண்டின் சட்டம் 25) இன் கீழ் நிறுவப்பட்ட 15 மத்திய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இந்தப் பல்கலைக்கழகம் இந்தியாவின் கேரள மாநிலத்தின் வடமாவட்டமான காசர்கோடில் அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகம் காசர்கோட்டிலிருந்து 9.8 கிலோ மீட்டர் தொலைவிலும் காஞ்ஞங்காட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேரியவில் அமைந்துள்ளது. பல்கலைக்கழகம் வித்யாநகரில் உள்ள ஒரு தற்காலிக வளாகத்தில் மானுடவியல் பள்ளி மற்றும் பிற வசதிகளுடன் செயல்படத் தொடங்கியது.[1][2] ![]() அமைப்பு மற்றும் நிர்வாகம்பள்ளிகள் மற்றும் துறைகள்தேஜஸ்வினி மலை (பிரதான வளாகம்)உலகளாவிய ஆய்வுகள் பள்ளி
பொருளியல் மற்றும் கல்வி பள்ளி
மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பள்ளி
இயற்பியல் அறிவியல் பள்ளி
அறிவியல் வளாகம்உயிரியல் அறிவியல் பள்ளி
நில அறிவியல் பள்ளி
சட்ட வளாகம்தொழில்முறை ஆய்வுகள் பள்ளி
மொழி மற்றும் ஒப்பீட்டு இலக்கிய பள்ளி
தொழில்முறை ஆய்வுகள் பள்ளி
வணிக ஆய்வுகள் பள்ளி
கல்வியாளர்கள்கல்வித் திட்டங்கள்முதுகலை திட்டங்கள்முதுகலை திட்டத்தின் காலம் 4 பருவங்கள். ஒவ்வொரு பருவ காலமும் 16–18 வாரங்கள், 5 வேலை நாட்கள் மற்றும் வாரத்திற்கு 30 பாட மணி நேரங்கள் எனப் பிரிக்கப்பட்டுச் செயல்படுகிறது. விருப்ப அடிப்படையிலான பாடத்தேர்வு மற்றும் பருவமுறை (சிபிசிஎஸ்) வடிவத்தின் கீழ் கல்வித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இரண்டு வகையான படிப்புகள் வழங்கப்படுகின்றன:
இவற்றைத் தவிர, ஒவ்வொரு மாணவரும் உண்மையான சிக்கல்களுக்கு அறிவைப் பயன்படுத்துவதை வலியுறுத்தும் ஒரு விளக்கக்காட்சி /ஆய்வுத் திட்டத்தைச் செய்கிறார்கள். முதுநிலை திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கத் தேவையான குறைந்தபட்ச மொத்த வரவு 4 பருவத்திற்கு 72 வரவு. 72 வரவுகளில், ஒரு மாணவர் குறைந்தபட்சம் 48 ஐ பெற வேண்டும். இதில் அடிப்படை படிப்புகளுக்கான ஆய்வுத்திட்டம் மற்றும் குறைந்தபட்சம் 12. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகளுக்கு 24 வரவுகளுக்கு மேல் இல்லை.[2] முனைவர் பட்டப் படிப்புபல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளும் முனைவர் பட்டப்படிப்பினை வழங்கும் ஆராய்ச்சி நிறுவனங்களாகும். கிலா என்பது சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் அறிவியலின் ஆராய்ச்சி மையமாகும். தரவரிசைமாணவர் வாழ்க்கைஉதவித்தொகை / நிதி உதவிஇப்பல்கலைக்கழகம் இதன் முதுநிலை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. மாணவர் எதிர்ப்பு காரணமாக இது 2017 கல்வியாண்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டது. விடுதி வசதிபெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனியான விடுதிகள் உள்ளன. [2] போக்குவரத்து வசதிஅனைத்து மாணவர்களுக்கும் தங்களின் விடுதிகளிலிருந்து பல்கலைக்கழக வளாகங்களுக்குச் செல்ல மானிய விலையில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.[2] பல்கலைக்கழக நூலகம்மத்திய பல்கலைக்கழகம் அதன் அனைத்து வளாகங்களிலும் நூலகங்களைக் கொண்டுள்ளது.[2] மாணவர் பேரவைமாணவர் பேரவை என்பது 40 மாணவர் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு மாணவர் அமைப்பாகும். இதில் 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 20 உறுப்பினர்களைத் துறைகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. உறுப்பினர்களைக் கொண்ட ஒரு செயற்குழுவையும் கொண்டுள்ளது. தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், இரண்டு இணைச் செயலாளர்கள் மற்றும் நான்கு செயற்குழு உறுப்பினர்கள் மாணவர் பேரவையின் அலுவல் குழுவில் உள்ளனர். [2] மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia