கைபேசிவழிக் கற்றல் (M-Learning) என்பது பல சூழ்நிலைகளில் கற்றல், சமூக, உள்ளடக்கத் தொடர்புகளைத் தனிப்பட்ட மின்னனியல் கருவிகள் மூலம் கற்றல் ஆகும்.[1][2]
திறந்தமுறை இணையக் கல்வியின் வழிப் பயிலும் மாணவர்கள் தங்களது நேர வசதிக்காக கைபேசிக் கருவிக் கல்வித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். கைபேசிவழிக் கற்றல் தொழில்நுட்பங்களில் கையடக்கக் கணினிகள், எம்பி 3 இசையலைககள், அலைபேசிகள் மற்றும் மேசைக்கணிப்பொறி ஆகியவை அடங்கும்.[3]
கைபேசிவழிக் கற்றல் கற்போரின் இயக்கத்தின் மீது கவனம் செலுத்தி, சிறிய தொழில்நுட்பங்களுடன் தொடர்பு கொள்கிறது. கைபேசிக்கருவிகளைப் பயன்படுத்திக் கற்றல் பொருள்களை உருவாக்குவது முறைசாராக் கல்வியின் ஒரு முக்கியப் பகுதியாக அமைகிறது. கைபேசிவழிக் கற்றல் கிட்டத்தட்ட எங்கு இருந்தும் அணுக முடியும் வகையில் அமைந்துள்ளது.[4]
உடனடிக் கருத்துகள், உதவிக்குறிப்புகள் மூலம் அதே உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி அனைவருக்கும் பகிர்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.
கைபேசிவழிக் கற்றல் புத்தகங்கள், குறிப்புகளுக்கு மாற்றாக விளங்குகிறது.
வகுப்பறையில் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவது முதன்மையானது. புத்தகங்கள், கணினிகளை விடவும் பயன்படுத்தப்படும் கைபேசிகள் மிகவும் இலகுவானவை.
கைபேசிவழிக் கற்றல் பயிற்றுவிக்கும் செயல்முறை வகைகளை மாணவர்களிடையே ஒன்றுகலந்த கற்றல் அணுகுமுறையாகப் பயன்படுத்தலாம்.
கைபேசிவழிக் கற்றல் கற்றல் செயல்பாட்டை ஆதரித்து ஒருங்கிணைக்கிறது.
கைபேசிவழிக் கற்றல் சிறப்பு தேவைகளுடன் கூடிய மாணவர்களுக்கான பயனுள்ள கூடுதல் கருவியாகும். இருப்பினும், குறுஞ்செய்தி, பல்லூடக குறுஞ்செய்தி ஆகியவை மாணவர்களிடம் குறிப்பிட்ட குறைபாடுகள், சிரமங்களைப் பெற்று இருக்கும்.
கைபேசிவழிக் கற்றல் இளைஞர்களைக் கற்றலில் மீண்டும் ஈடுபடுத்த ஒரு கொக்கி போலப் பயன்படுத்தப்படுகிறது.[6][7]
கைபேசிவழிக் கற்றல் நன்மைகள்
ஒப்பீட்டளவில் மலிவான விலையில் கிடைக்கின்றன. கைபேசிகள் தனிக்கணினி, மடிக்கணினிகளைக் காட்டிலும் விலை குறைவாக இருக்கும்.
பல்லூடக உள்ளடக்க, உருவாக்க ஏந்துகளைக் கொண்டிருக்கும்.
கைபேசி விளையாட்டுகள்.<ref name="Singh 2010 65–72">Singh, Mandeep (2010). "M-learning: A New Approach to Learn Better". International Journal of Education and Allied Sciences2 (2): 65–72.
↑Crompton, H. (2013). "A historical overview of mobile learning: Toward learner-centered education". In Z. L. Berge & L. Y. Muilenburg (Eds.), Handbook of mobile learning (pp. 3–14). Florence, KY: Routledge.
↑Crescente, Mary Louise; Lee, Doris (March 2011). "Critical issues of m-learning: design models, adoption processes, and future trends". Journal of the Chinese Institute of Industrial Engineers28 (2): 111–123. doi:10.1080/10170669.2010.548856.
↑Mobile learning in Practice: Piloting a Mobile Learning Teachers’ Toolkit in Further Education Colleges. C. Savil-Smith et al. (2006), p. 8
↑Elias, Tanya (February 2011). "Universal Instructional Design Principles for Mobile Learning". International Review of Research in Open and Distance Learning12 (2): 143–156.
↑ 8.08.1Rudestam, K., & Schoenholtz-Read (2009). Handbook of online learning, 2nd ed. London: Sage.
↑Elias, Tanya (February 2011). "Universal Instructional Design Principles for Mobile Learning". International Review of Research in Open and Distance Learning12 (2).
↑Crescente, Mary Louise; Lee, Doris (March 2011). "Critical issues of m-learning: design models, adoption processes, and future trends". Journal of the Chinese Institute of Industrial Engineers28 (2).