கோட்லிப் ஹேபர்லேண்ட்
கோட்லிப் ஹேபர்லேண்ட் (Gottlieb Haberlandt) (28 நவம்பர் 1854, மோசன்மகயாரோவர் - 30 ஜனவரி 1945, பெர்லின்) ஒரு ஆஸ்திரிய தாவரவியலாளர் ஆவார். இவர் ஐரோப்பிய 'சோயாபீன்' முன்னோடி பேராசிரியரான ப்ரிட்ரிக் ஜே. ஹேபர்லேண்ட்டின் மகனாவார்.[1] இவருடைய மகன் லுத்விக் ஹேபர்லேண்ட் ஆரம்பகால கட்டத்தில் இனப்பெருக்க உளவியலாளராக இருந்தார். இப்போது நாம் பயன்படுத்தும் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரையின் 'தாத்தா' ஆவார். ஏனெனில் இவரே அந்த மாத்திரையை கண்டுபிடித்து வழங்கினார். தனிமைப்படுத்தப்பட்ட திசுக்கள், தாவர திசு வளர்ப்பு முறை குறித்த சாத்தியக்கூறுகளை ஹேபர்லேண்ட் முதலில் சுட்டிக் காட்டினார்.[2] திசு வளர்ப்பு மூலம் தனித்தனியான உயிரணுக்களின் சாத்தியக்கூறுகள் மற்றும் திசுக்களின் பரஸ்பர தாக்கங்கள் இந்த முறையால் தீர்மானிக்கப்படலாம் என்று இவர் பரிந்துரைத்தார். திசு மற்றும் செல் பண்பாட்டிற்கான ஹேபர்லேண்டின் அசல் வலியுறுத்தல் வழிமுறைகள் உணரப்பட்டு, உயிரியல் மற்றும் மருத்துவத்தில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தன. 1902 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இவரது அசல் யோசனை: “கோட்பாட்டளவில் அனைத்து தாவர செல்கள் ஒரு முழுமையான தாவரத்திற்கு உயிர் கொடுக்க முடியும்”.[3][4][5] தாவரங்களில் நடைபெறும் உணவு தயாரிக்கப்படும் உயிர்ச்செயன்முறை ஆராய்ச்சியான ஒளித்தொகுப்பினை 1904 இல் கோட்லிப் ஹேபர்லேண்ட் விவரித்தார் [6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia