கோபால்ட் செருமேனைடு
கோபால்ட் செருமேனைடு (Cobalt germanide ) என்பது CoGe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கோபால்ட்டும் செருமேனியமும் சேர்ந்து இந்த உலோகங்களிடை சேர்மம் உருவாகிறது. தயாரிப்புகனசதுர CoGe படிகங்கள் Co மற்றும் Ge பொடிகளின் கலவையை 4 கிகாபாசுக்கல் அழுத்தத்திலும் 800-1000 °செல்சியசு வெப்பநிலையிலும் 1 முதல் 3 மணி நேரம் வரை வினைபுரியச் செய்தால் கோபால்ட் செருமேனைடு உருவாகும். இது P213 என்ற இடக்குழில் cP8, a = 0.4631 நானோமீட்டர் என்ற செல் அளவுருக்களிலும் படிகமாகிறது. தலைகீழ் மையம் இல்லை என்பதால் இவை வலது கை மற்றும் இடது கை நாற்தொகுதி மையங்களுடன் திருகுசுழலாக உள்ளன. கனசதுர கோபால்ட் செருமேனைடு சிற்றுறுதி நிலைப்புத்தன்மை கொண்டதாகும். மேலும் சுற்றுப்புற அழுத்தத்தில் 600 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்தும்போது இது ஒற்றைசரிவச்சு கட்டமைப்புக்கு மாற்றப்படுகிறது.[1] கனசதுர CoGe சேர்மம் 132 கெல்வின் நிலைமாற்ற வெப்பநிலை கொண்ட ஓர் எதிர்ப்பு வயக்காந்தமாகும்.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia