சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருதுசாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது (Bhasha Samman), இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற 24 மொழிகள் தவிர பிற இந்திய மொழிகளின் அறிஞர்கள், எழுத்தாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் அமைப்பளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 1996-ஆம் ஆண்டு முதல் பதக்கம் மற்றும் ரூபாய் 25,000 ரொக்கப் பணத்துடன் பாஷா சம்மான் விருது சாகித்திய அகாதமி வழங்கி கௌரவிக்கிறது. 2009-ஆண்டு முதல் பதக்கத்துடன் ரொக்கப் பணம் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. பாஷா சம்மான் விருது ஆண்டு தோறும் அங்கீகாரம் பெறாத இந்திய மொழிகள் பேசும் மூன்று முதல் நான்கு நபர்களுக்கு வழங்கப்படுகிறது.[1] சௌராஷ்டிர மொழிக்கான விருதை பெற்றவர்கள்தமிழ்நாட்டில் சிறுபான்மையினரான சௌராட்டிரர்கள் பேசும் சௌராஷ்டிர மொழி மற்றும் இலக்கிய மேம்பாட்டிற்காக உழைத்த கே. ஆர். சேதுராமன் மற்றும் தாடா. சுப்பிரமணியன் ஆகிய எழுத்தாளர்களுக்கு கூட்டாக 2006ஆம் ஆண்டில் பாஷா சம்மான் (Bhasha Samman) விருது வழங்கப்பட்டுள்ளது.[2] 2015ல் இதே விருதை டி. எஸ். சரோஜா சுந்தரராஜன் மற்றும் டி. ஆர். தாமோதரன் கூட்டாகப் பெற்றனர். [3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia