சாக்குலைனா (Sacculina) என்னும் கொட்டலசு, கடல் நண்டின் உடலில் ஒட்டிக் கொண்டு இருக்கும் புற ஒட்டுண்ணி ஆகும். கடல் நண்டுகளைப் பற்றிக்கொண்டு, அவற்றின் உடலிலே ஒட்டிக்கொண்டு, முக்கியமாக இரத்தத்திலிருந்து, தனக்குத் தேவையான உணவுப்பொருளை உறிஞ்சி வாழும் இயல்புடைய ஒட்டுண்ணி ஆகும். கடல் நண்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட உயிரினங்களில், இந்த ஒட்டுண்ணிகள் காணப்படுகின்றன.[2][3] சாக்குலைனா ஓட்டுண்ணி ஆயினும், உருவே தெரியாதபடி, மிகவும் மாறுதல் அடைந்த உருவத்தினைப் பெற்றிருக்கிறது. இந்த ஒட்டுண்ணிக்கு உணவுப்பாதையோ, இதயமோ, கண்போன்ற உறுப்புக்களோ இல்லை. உருவம் இல்லாத, ஒரு பை போன்ற கழலையாக மாறி, அமைந்து இருக்கும்.
உடமைப்பு
இவ்வுயிரியின் உடலானது இரண்டு பகுதியாகக் காணப்படுகின்றன. ஒன்று இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்ட, நண்டுடன் ஒட்டிக் கொண்டு இருக்கும் பகுதி ("externa") ஆகும். மற்றொன்று நண்டு உடலில் இருந்து உணவை உறிஞ்சும் பகுதி("interna") ஆகும். நண்டின் உடலில் இருந்து, அதன் உணவை உறிஞ்சுவதற்கு ஏற்றவாறு, இதன் உடலில் வேர் போன்ற உறுப்புக்கள், இனம் பெருக்குவதற்கு வேண்டிய பாலணுச் சுரப்பிக்கள் மட்டுமே இருக்கின்றன. இதில் நரம்பணு முடிச்சு ஒன்றும், இரண்டு அண்டச் சுரப்பிகளும், இரண்டு விந்தணுச் சுரப்பிகளும் இருக்கும். இதைச் சுற்றிலும் தோற்போர்வையானது ஒரு பை போல் அமையும். அந்தப் பைக்கு ஒரு வாயில் உண்டு. அந்தப் பைக்குள் அண்டவணுக்கள் முதிர்ந்துவரும். அவற்றை, இந்த உயிரிலேயே இருந்து உண்டாகும் விந்தணுக்கள் கருவுறச் செய்யும். கரு வளர்த்து மேலே சொன்ன, நாப்பிளியஸ் லார்வாவாக மாறும். இதுவே இந்தப் பிராணியின் வாழ்க்கை வட்டம் ஆகும். இதன் வாழ்க்கை வட்டத்தை அறிந்த பிறகே இது என்ன வகையான பிராணி என்று தீர்மானிக்க முடிந்தது. இது கணுக்காலித் தொகுதியிலே கிரஸ்ட்டேஷியா என்னும் ஒட்டுமீன் வகுப்பிலே சிர்சிப்பீடியா என்னும் வரிசையைச் சேர்ந்தது என வகைப்படுத்தப் பட்டது. இந்த சாக்குலைனா தொற்று உள்ள நண்டில் சில மாறுதல்கள் உண்டாகி, அந்நண்டுகள் சற்று மாறுபட்டுக் காணப்படுகின்றன. சில வகை உயிரிகள்(Briarosaccus), உணவு உறிஞ்சும் வேர்களை, நண்டின் மூளையுள்ள நரம்பு மண்டலம் வரை நீட்டித்து, நண்டின் இயல்புகளை மாற்றுவதாகக் கண்டறிந்துள்ளனர்.
இனப்பெருக்கம்
நண்டுக்குள் வந்த சாக்குகலனா உயிரணுக்கள், நண்டின் இரைப்பையின் மேல் பொருந்தி, உருண்டையாக இருக்கும் பகுதியிலிருந்து வேர்கள் வளர்வதைக் காணலாம். சிலகாலம் பொறுத்து, அது கீழ்நோக்கி நகர்ந்து, வளைவான இடத்திற்கு முன் வந்து நிலைக்கும். இது முதிர்நிலையிலே, நண்டின் அடிவயிற்றிலே, ஒரு பை வடிவான கட்டிபோல, வெளியே புடைத்துக் கொண்டு இருக்கும். இந்தப் பையானது, ஒரு காம்பு போன்ற பாகத்தால், நண்டின் உடம்பில் பொருந்தி இருக்கும். அந்தக் காம்பில் இருந்து, பல கிளைகள், வேர்கள் போல, நண்டின் உடம்பிலே, பல இடங்களில் பரவி இருக்கும். இவ்வேர்கள் வழியாகத் தான், இப்பிராணியின் உணவை உறிஞ்சும். அப்பையிலே முட்டைகள் நிறைந்து காணப்படும். ஒவ்வொரு முட்டையும், 'நாப்பிளியஸ்' என்னும் 'லார்வா'வாகவும், அதன் பிறகு, 'சைப்பிரிஸ்' என்னும் 'லார்வா'வாகவும் முதிரும் வளரியல்பு கொண்டு விளங்குகிறது.
இந்த சைப்பிரிஸ் நிலையில் தான், ஓர் இளம் நண்டைப் பற்றி வாழத் தொடங்கும். சைப்பிரிஸின் உடலிலிருந்து, ஒரு சிறு உயிரணுக்களின் தொகுதி, நண்டின் உடலில் புகுந்து, இரத்தத்தில் மிதந்து சென்று, நண்டின் உணவுப்பாதையை அடையும். அதன் பிறகு, அங்குள்ள இரைப்பையானது, சிறுகுடலோடு சேரும் இடத்தில், நிலைத்து வளரும் வாழ்க்கை முறையைப் பெற்றுள்ளது. இந்த இடத்தினை அடைந்த பிறகு, கிளைகள் கொண்ட வேர்களைப் போல உண்டாகி, மேற்சொன்னதுபோல, நண்டின் உடலின் பல பாகங்களுக்குச் செல்லும். உயிரணுத் தொகுதி, மேலும் வளர்ந்து, ஓர் உள்ளுறுப்புப் பிண்டமாக | (Visceral mass) வளரும். இதன் வாழ்நாள், நண்டின் வாழ்நாளை ஒத்துக் காணப்படுகிறது. நண்டுகளின் வாழ்நாளானது 1-2 வருடங்கள் இருக்கும்.[4] பச்சை நண்டுகளின்(Carcinus maenas) இனப்பெருக்க விகிதத்தை இந்த மீனினத்தைக்கொண்டு கட்டுபடுத்த பயனாகிறது. எனினும், இக்கட்டுப்படுத்துதல் உயிரின அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.[5]
இனங்கள்
100 நூற்றுக்கும் மேற்பட்ட, சாக்குலைனா( Sacculina) இனங்கள் கண்டறியப்பட்டு, ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன.[6] அவற்றின் விலங்கியல் வகைப்பாட்டுப் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
(cites many earlier papers by Boschma and others including other sources for the above list)
Guérin-Ganivet, J. (1911). "Contribution a l'étude systématique et biologique des Rhizocéphales". Travaux scientifiques du Laboratoire de Zoologie et de Physiologie Maritimes de Concarneau3 (7): 1–97.
Gurney, R. H.; Rybakov, A. V.; Høeg, J. T.; Kuris, A. M. (2006). "Sacculina nectocarcini, a new species of rhizocephalan, a new species of rhizocephalan(Cirripedia: Rhizocephala) parasitising the red rock crab Nectocarcinus integrifrons (Decapoda: Brachyura: Portunidae)(Decapoda: Brachyura: Portunidae)". Zootaxa1332: 37–50.