சான் மிகுவல் சந்தை
சான் மிகுவல் சந்தை (Market of San Miguel) எசுப்பானியா நாட்டின் தலைநகரமான மத்ரித்து நகரத்தில் அமைந்துள்ள ஒரு மூடப்பட்ட சந்தையாகும். இச்சந்தை முதலில் 1916 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் தனியார் முதலீட்டாளர்களால் வாங்கப்பட்டது. அவர்கள் சந்தையின் இரும்புக் கட்டமைப்பை புதுப்பித்து 2009 ஆம் ஆண்டில் மீண்டும் திறந்தனர்.[1] குறிப்புசான் மிகுவல் சந்தையானது மத்ரித்து நகரத்து சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான ஒரு சந்தையாகும். ஏனெனில் இது பிளாசா மேயர் என்ற பொதுமக்கள் கூடுமிடத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் மத்ரித்து நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. சான் மிகுவல் ஒரு பாரம்பரிய மளிகை சந்தை அல்ல. மாறாக ஒரு சுவையான சிற்றுணவுகள் சந்தையாகும். 30 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட வெவ்வேறு விற்பனையாளர்கள் பலவிதமான புதிதாக தயாரிக்கப்பட்ட சிற்றுணவு வகைகளையும், வேகவைத்த பொருட்கள் மற்றும் பிற உணவுகளையும் விற்பனை செய்கின்றனர். பீர், ஒயின் மற்றும் சாம்பெயின் ஆகிய மதுவகைகளும் இங்கு கிடைக்கின்றன.[1][2] படக்காட்சியகம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia