சாருவி அகர்வால்
சாருவி அகர்வால் (Charuvi Agrawal) 1983 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் நாள் பிறந்தார்.இவர் ஒரு இந்திய ஓவியர், சிற்பி, திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார். அவர் செரிடன் தொழில்நுட்ப கல்லூரியில் பட்டம் பெற்றார்.[1] மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் கலைக் கல்லூரியில் நுட்பக்கலை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர்.[2] சாருவி வடிவமைப்பு ஆய்வகங்கள்2009 ஆம் ஆண்டு சாருவி அகர்வால் அவர்கள் ஒரு முன்னணி இயங்குபட மற்றும் வடிவமைப்பு ஆய்வகத்தை நிறுவினார். இதற்கு சாருவி வடிவமைப்பு ஆய்வகங்கள் என பெயரிட்டு இயங்கி வருகிறார்.இந்த நிறுவனம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் இருபரிமாணம் மற்றும் முப்பரிமாண இயங்கு படம் தயாரித்தல், காட்சி விளைவுகள், ஒளி கற்பனை சேர்ப்பு மற்றும் வடிவமைப்பு முதலிய துறைகளில் தொழினுட்பம் பெற்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் உலகலாவிய பல முதன்மை நிறுவனங்களுடன் இணைந்து இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல இடங்களில் எண்ணற்ற கண்காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப திருவிழாக்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளது. அனுமன் சிலைசாருவி அகர்வால் அவர்கள் 26000 தொங்கு மணிகளால் ஆன 25 அடிகள் உயரம் உள்ள ஒரு அனுமன் சிலையை வடிவமைத்தார்.[3][4] இந்த அனுமன் சிலை கலைநயம், புதுமை மற்றும் திறமை மிக்க ஒரு வடிவமைப்புக்கு சான்றாக விளங்குகிறது. மேலும் இந்த படைப்பு சாருவி அகர்வாலின் கற்பனை மற்றும் கலையின் மேலும் கொண்ட ஈர்ப்புக்கு உதாரணமாக அமைந்துள்ளது.[5] களிமண் நுண் சிலைகள்சாருவி அகர்வால் அவர்கள் களிமண் கொண்டு மனித முப்பரிமாண நுண் சிலைகளை செய்யும் திறன் பெற்றவர். தமது இந்த புதிய கலை நுணுக்கத்திற்கு களிமண் நுண் சிலைகள் என பொருள்படும் கிளேட்ரானிக்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இவ்வாறு களிமண்ணிலிருந்து சுவாரசியமான உருவங்களை உருவாக்குவது என குழந்தை பருவத்திலிருந்தே பொழுதுபோக்காக இவர் இந்த கலையை விரும்பி தேர்வு செய்தார். தனது ஆறாம் வகுப்பு பள்ளி படிப்பில் சிறுவயதில் கோடைகால சிறப்பு வகுப்பில் களிமணைக் கொண்டு நுண் சிலைகளை செய்ய கற்றுக்கொண்டார். ஆனால் பிற்காலத்தில் தனது வாழ்வில் இந்த நுண் கலையில் சிறந்து விளங்குவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். உதாரணமாக, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் களிமண் நுண் சிலை செய்து, ஒரு பொம்மையை போல் உருவாக்கினார். மேலும் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களது களிமண் நுண் சிலையில் பாக்கெட்டில் சீப்பு மற்றும் அருகில் ஒரு ராக்கெட் இருப்பதை போல் செய்தார். அடிப்படையில் இவர் சிற்பக் கலையுடன் சேர்த்து இயங்கு சித்திரம் கலந்த கலையை இணைக்கிறார்.[6] மேலும் இவர் ஆர்னோல்டு சுவார்செனேகர், அன்னை தெரசா, வீரப்பன், உசாமா பின் லாதின், சோனியா காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங், டாக்டர் சலீம் அலி, ஜார்ஜ் வாக்கர் புஷ், பால் தாக்கரே மற்றும் ஐ. கே. குஜரால் என பல அறியப்பட்ட நபர்களின் களிமண் நுண் சிலைகளை உருவாக்கி காட்டினார்.[7] ஸ்ரீ அனுமன் சாலிசாசாருவி அகர்வால் அவர்கள் 2013 ஆண்டு ஸ்ரீ அனுமன் சாலிசா என்ற முப்பரிமாண இயங்கு சித்திர குறும்படம் ஒன்றை இயக்கினார். இதில் பாடப்பெற்ற பாடல் இந்து மத தொன்மையியலை பறைசாற்றும் விதத்தில் உலகெங்கும் பாடப்பட்டது.[8] இந்த பின்னணி பாடல் சோனு நிகம், உதித் நாராயண், ஹரிஹரன், சங்கர் மகாதேவன், ஷான் என 19 பிரபல பாடகர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன் அவர்களால் பாடப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்த முப்பரிமாண இயங்கு சித்திர குறும்படம் உலகம் முழுவதும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. மற்றும் 6 முறை ஆஸ்கார் விருது தகுதி படங்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டது.[9] நம்பிக்கை மற்றும் ஆன்மீகம் பற்றிய நமது புரிதலின் வரம்புகளை இந்த படம் முன்னெடுத்து செல்ல முயற்சிக்கிறது. ஸ்ரீ அனுமன் சாலிசா முப்பரிமாண இயங்கு சித்திர குறும்படம் முழுவதும் இந்து புராணக் கடவுளான அனுமனின் வீர தீர செயல்கள் மற்றும் அவரின் பலம் என காட்சிகளால் நிரப்பப்பட்ட ஒரு படம் ஆகும். தெய்வீகத்தைப் பற்றிய நமது உணர்தல் பலவிதமான வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளது. ஆனால் அதன் உண்மைத் தன்மை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் அது ஒருவரின் சுய உணர்தலைப் பொருத்தது. இந்த படம் அனுமன் மீது உள்ள பக்தி மற்றும் மதிப்பு முதலியவற்றை மிக உயர்ந்த வெளிப்பாட்டை வழங்குகிறது. மேலும் இந்த படம் இறை நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சித்திரம் ஆகும்.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia