சாவ் முகமூடி

புருலியாவின் சாவ் முகமூடி
பாக்முண்டியின் சாவ் முகமூடி, புருலியா மாவட்டம்
வேறு பெயர்கள்சாவ் நடன முகமூடி
குறிப்புசாவ் முகமூடி புருலியா வில் நடைபெறும் சாவ் நடத்தின் போது பயன்படுத்தப்படுகிறது
வகைமேற்கு வங்காளத்தின் நாட்டுப்புறக்கலை
இடம்புருலியா மாவட்டம் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள்
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது28 மார்ச், 2018
பொருள்களிமண், மென் காகிதம் பசை, துணி, மண், சாம்பல் தூள். மற்றும் பிற.
அதிகாரப்பூர்வ இணையதளம்ipindiaservices.gov.in

சாவ் முகமூடி ( Chhau mask) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் உள்ள புருலியா மாவட்டத்தின் கலாச்சார பாரம்பரியமாகும். சாவ் நடனங்கள் ஒடிசா, மேற்கு வங்காளம் என்ற இரு மாநிலங்களில் நிகழ்த்தபடும் நாட்டுப்புற நடனக் கலைவடிவமாகும். மேற்கு வங்கத்தின் புருலியா பகுதியில் நிகழ்த்தப்படும் சாவ் நடனத்திற்கும் ஒடிசா சாவ் நடனத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு அந்நடனத்தில் அணியப்படும் முகமூடியின் பயன்பாட்டில் உள்ளது. புருலியா சாவ் நடனத்தில் முகமூடியை பயன்படுத்துகிறார்கள், ஆனால் ஒடிசா சாவ் நடனத்தில் முகமூடியைப் பயன்படுத்துவதில்லை. முகமூடியைப் பயன்படுத்தும் பொழுது முகபாவனையானது உடல் இயக்கம் மற்றும் சைகையின் மூலாமாகவே வெளிப்படுத்தப்படுகிறது.[1] புருலியாவின் சாவ் முகமூடிபுவியியல் சார்ந்த குறியீடுகளின்பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புருலியா சாவ் நடனத்தின் அடிப்படை வேறுபாடு முகமூடியாகும் இது தனித்துவமானதும் பாரம்பரியமானதும் ஆகும்.

சாவ் முகமூடிகள் செய்யும் பாரம்பரியமானது பாக்முண்டியின் அரசர் மதன் மோகன் சிங் தியோ என்பவரின் ஆட்சியின் போது தொடங்கியது. சாவ் முகமூடி பாரம்பரியமாக புருலியாவில் உள்ள பழைய நடனக்கலை வடிவங்களுடன் தொடர்புடையது.

புருலியா சாவ் நடனத்தில் மஹிசாசுரமர்த்தினி

புருலியாவின் சாவ் நடனத்தில் பயன்படுத்தப்படும் முகமூடிகள் மகிசாசூரன், மகிஷாசுரமர்த்தினி, இராமர், சீதை, இராவணன் போன்ற தொன்மவியல் கதாபாத்திரங்களைக் குறிப்பிடும் வகையில் விளங்குகின்றன. சில நேரங்களில் சமூகக் கருப்பொருள்களை விளக்க, சிறிய சாந்தளத் தம்பதிகளின் முகமூடிகள் பயன்படுத்தப்படுகின்றன. முகமூடி இறகுகள் கொண்டும் முகத்தை சுற்றியுள்ள வகையில் பிற ஆபரணங்கள் கொண்டும் அணி செய்யப்படுகின்றன. அவை முகமூடியிலிருந்து 2 அடி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கும். முகமூடிகள் இந்து மதக் கடவுளர்களான தேவி துர்கா, லட்சுமி மற்றும் முருகன் போன்ற தெய்வங்களையும் சித்தரிப்பதாக உள்ளன. முகமூடிகள் அடர் மஞ்சள் அல்லது பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகின்றன. சிவன், கணேஷ் மற்றும் தேவி சரஸ்வதி ஆகியோருக்கான முகமூடிகளில் வெள்ளை நிறம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு அல்லது அடர் நீலம் மா காளிக்கு பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக கிருஷ்ணர் மற்றும் ராமரின் முகமூடிகளின் நெற்றியில் திலகம் பயன்படுத்தப்படுகிறது. அசுரர்கள் கருப்பு அல்லது அடர் பச்சை நிறத்தில் அடர்த்தியான மீசையுடன், நீளமான பற்கள் மற்றும் பெரிய கண்களால் வரையப்பட்டிருக்கிறார்கள்.

உற்பத்தி

புருலியாவின் பாக்முண்டி தொகுதி, சரிதா கிராமத்தில் சாவ் முகமூடிகளை தயாரிப்பவர்கள்

சாவ் முகமூடிகள் சூத்திரதார் எனப்படும் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்களால் தயாரிக்கப்படுகின்றன. முகமூடியை உருவாக்குவது பல்வேறு நிலைகளில் அமைகிறது. மென்மையான காகிதங்களை நீர்த்த பசைகளில் முக்கியெடுத்து, எட்டு முதல் பத்து அடுக்குகள் வரை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்குகின்றனர். நன்றாக சாம்பல் பொடியால் பூசப்படுவதற்கு முன்பு, மண் அச்சுகளில் ஒன்றன்பின் ஒன்றாக அச்சுக்கு இந்தக் காகித அடுக்கு ஒட்டப்படுகிறது. முக அம்சங்கள் களிமண்ணால் ஆனவை. மண் மற்றும் துணியின் ஒரு சிறப்பு அடுக்கு பயன்படுத்தப்பட்டு, முகமூடி பின்னர் வெயிலில் காயவைக்கப்படுகிறது. இதற்குப் பிறகு, அச்சு மெருகூட்டப்பட்டு, துணி மற்றும் காகித அடுக்குகளை அச்சுக்குள்ளிருந்து பிரிக்கும் முன் இரண்டாவது சுற்று சூரிய உலர்த்தல் செய்யப்படுகிறது. மூக்கு மற்றும் கண்களுக்கு துளையிட்ட பிறகு, முகமூடி வண்ணம் பூசப்பட்டு இறகுகள் மற்றும் அணிகளால் அலங்கரிக்கப்படுகிறது. [2]

ஒரு இந்திய அஞ்சல் முத்திரையில் மேற்கு வங்கத்தின் சாவ் முகமூடி, 2017

புவியியல் அறிகுறிகள்

புருலியாவின் சாவ் முகமூடி இந்தியாவின் புவிசார் குறியீடுகளின் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புருலியா சாவின் அடிப்படை வேறுபாடு அதில் பயன்படுத்தப்படும் முகமூடி தனித்துவமானது மற்றும் பாரம்பரியமானதாகுய்ம்.

மேலும் காண்க

  • சாவ் நடனம்
  • மேற்கு வங்கத்தின் கலைகள்
  • சரிதா

குறிப்பு

  1. "The Official Website of Purulia District". purulia.gov.in. Retrieved 2018-02-12.
  2. "The Masks of Bengal" (PDF). static1.squarespace.com. Archived from the original (PDF) on 2018-02-13. Retrieved 2019-01-07.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya