சி-25 ஆழ்குளிர் உந்துபொறிசி-25 ஆழ்குளிர் உந்துபொறி இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரிக்கும் ஒரு உந்துபொறியாகும். சி-25 ஆழ்குளிர் உந்துபொறியானது ஜி. எஸ். எல். வி மார்க் III[1] ராக்கெட்டின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இது திரவ ஐட்ரசன் மற்றும் திரவ ஆக்சிசன் ஆகிய எரிபொருள்களைக் கொண்டு இயங்குகின்றது. இது 25 டன் எடை எரிபொருளைக் கொண்டது. இது ஏற்கனவே சோதனைச் செய்யப்பட்டு தகுதிப்படுத்தப்பட்ட ஜி. எஸ். எல். வி மார்க் II[2] யின் மூன்றாம் நிலையில் பயன்படுத்தப் படுகின்ற ஆழ்குளிர் உந்துபொறியை விட அதிக ஆற்றல் வாய்ந்தது. ஜிஎஸ்எல்வி மார்க் III ராக்கெட்இந்த இராக்கெட் 5000 கிலோ எடையுடன் செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்புவதற்கு தயாரிக்கப்பட்டு வருகிறது.[3] இதில்
ஆகியவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் திட திரவ எரிபொருள்களைக் கொண்டு பகுதிகள் வடிவமைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டுத் தகுதிபடுத்தப்பட்டுள்ளது. தற்போது சி-25 எனப்படும் ஆழ்குளிர் உந்துபொறி வடிவமைப்பு நடைபெற்று வருகின்றது. ஆழ்குளிர் உந்துபொறிஇது 20 டன் உந்து விசையை கொடுக்க வல்ல ஒரு இராக்கெட் பொறி. இதை C-25 என்றும் அழைப்பர். 25 என்ற எண் அதில் உள்ள திரவத்தின் எடையை குறிக்கும். இது திரவ ஐட்ரசனாலும் திரவ நைட்ரசனாலும் இயங்குகின்றது. முக்கிய பாகங்கள்
உந்து அறை உள்ள முக்கிய பாகங்கள்
உந்து அறைஇந்த எரி அறை (Combustion Chamber) அதிக அழுத்தத்தையும் அதிக வெப்பத்தையும் தாங்கும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளித்துறையில் உள்ள திரவ இயக்க திட்ட மையம், வலியமலா என்ற இடத்தில் இவ்வுந்து பொறி வடிவமைக்கப்பட்டது. முதல் உந்து பொறி கோட்ரெச் மற்றும் மதார் குழுமத்தால் உருவாக்கப்பட்டது. தற்போது இது சோதனைக்கு தயாராக உள்ளது. இதைச் சோதனை செய்வதற்கு தேவையான உள்கட்டமைப்புகள் திரவ இயக்க திட்ட மையம், மகேந்திரகிரியில் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆய்வுத் தளம்இதன் முதல் சோதனையனது திரவ உந்துகை அமைப்பு மையம், மகேந்திரகிரியில் உள்ள சோதனை சாலையில் வைத்து பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia