சிங் (2016) திரைப்படம்சிங் ( Sing ) என்பது 2016 இல் வெளிவந்த அமெரிக்க அனிமேஷன் - இசை நகைச்சுவை திரைப்படம் ஆகும், இந்த திரைப்படம் இலுமினேஷன் என்டேர்டைன்மெண்ட் என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. கதை சுருக்கம்நஷ்டத்தில் இருந்தாலும் அவருடைய இசை அரங்கத்தை விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல் பழைய இசை நிகழ்ச்சி அரங்கத்தின் உரிமையாளர் பாஸ்டர் மூன் அவருடைய இசை நிகழ்ச்சியை நடத்த முயற்சி செய்கிறார் .. இருந்தாலும் ஒரு தவறுதலால் இசை நிகழிச்சியின் பரிசு தொகை ஆயிரம் டாலர்கள் என்பதற்கு பதிலாக லட்சம் டாலர்கள் என பதியப்பட்டுவிட்டது இந்த விளம்பரம் பார்த்த நிறைய பேர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர் , இந்த உண்மை தெரியாமலே உரிமையாளர் பாஸ்டர் மூன் இசை நிகழ்ச்சியை நடத்த நினைக்கிறார்.ஆனால் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர்தான் இந்த உண்மை பாஸ்டர் மூன் வுக்கு தெரிய வருகிறது மேலும் வெவ்வேறு சூழ்நிலையில் இருந்து இந்த போட்டியில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கும் கனவுகளுடன் பங்குபெறும் போட்டியாளர்கள் எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் இந்த உண்மை தெரியவருகிறது , காலங்கள் கடந்ததால் சேதமான அந்த பழைய இசையரங்கமும் ஒரு கட்டத்தில் உடைந்து போகிறது , இதனால் பாஸ்டர் மூன் வருத்தம் அடைகிறார் , இருந்தாலும் பாடல் நிகழ்ச்சியில் பங்குகொள்ள வந்தவர்களின் உதவியுடன் ஒரு சிறிய தற்காலிக அரங்கம் அமைத்து இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது , இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெறுகிறது , பரிசுத்தொகை என்று எதுவும் இல்லாமலே இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து பாஸ்டர் மூனின் நண்பரின் பாட்டியும் முன்னாள் பாடகருமான நானாவின் உதவியுடன் இசையரங்கம் திரும்பவும் கட்டப்படுகிறது.[1] வசூல்தி சீக்ரெட் லைப் ஆப் பெட்ஸ் என்ற அனிமேஷன் திரைப்படத்தை தொடர்ந்து 75 மில்லியன் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 634.2 மில்லியன்[1] வசூல் செய்தது, இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் சிங் 2 , டிசம்பர் 2020 ல் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமான யூனிவெர்செல் மற்றும் இலுமினேஷன் தகவல் வெளியிட்டுள்ளது [1]
|
Portal di Ensiklopedia Dunia