சினைப்பை நோய்கள் மரபுவழி, சூழல் என இரண்டும் இணைந்த கூட்டுக்காரணிகளால் ஏற்படுகின்றன.[6][7][8]உடற்பருமன், போதுமான உடற்பயிற்சியின்மை, குடும்பத்தில் முன்பு எவருக்கேனும் இது காணப்பட்டிருத்தல் ஆகியவை இந்நோய்க்குறி பாதிப்பதற்கான அபாய காரணிகளாகும்.[3] ஆண்ட்ரோஜன் அளவு அதிகரித்திருத்தல், சினைமுட்டை வராமலிருத்தல், சினைப்பையில் கட்டிகள் தோன்றுதல் ஆகிய இவற்றில் ஏதேனும் இரண்டினைக் கொண்டு சினைப்பை நோய்க்குறி கண்டறியப்படுகிறது.[4] கட்டிகள் மீயொலிச் சோதனை மூலம் கண்டறியப்படலாம்.[9] மேலும் அண்ணீரகச் சுரப்பிக் கோளாறு, தைராய்டு சுரப்புக் குறை,மிகை பால்சுரப்புக் கோளாறு ஆகியவை இருந்தாலும் மேற்கண்ட அதே அறிகுறிகள் தோன்றும்.[9]
சினைப்பை நோய்க்குறிக்கான தீர்வு எதுவுமில்லை.[2] உடற்பயிற்சி, எடைக்குறைப்பு ஆகிய சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் இதற்கான சிகிச்சையாகக் கருதப்படுகிறது.[10][11] கருத்தடை மாத்திரைகள் சில நேரங்களில் சரியான மாதவிடாய் சுழற்சி, மிகை முடிவளர்ச்சி, முகப்பரு ஆகியவற்றின் ஒழுங்கமைப்பை மேம்படுத்த உதவலாம்.[12] மெட்பார்மின், எதிர்- ஆண்ட்ரோஜென் ஆகியவை உதவக்கூடும்.[12] முகப்பரு சிகிச்சை, முடி நீக்கு சிகிச்சை ஆகியவையும் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.[12] கருத்தரித்தலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு எடைக்குறைப்பு,மெட்பார்மின் அல்லது குளோம்பிபைன் ஆகியவை நல்ல பயனைத் தரும்.[13] சினைப்பை நோய்க்குறி காரணமாய் மலட்டுத்தன்மை ஏற்பட்டோருக்கு மற்ற சிகிச்சைகள் பலனளிக்காத போது செயற்கைமுறைக் கருவூட்டல் மிகுந்த பயன் தருகிறது.[13]
சினைப்பை நோய்க்குறி 18 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களுக்கிடையே தோன்றும் பொதுவான அகச்சுரப்பித் தொகுதிக் குறைபாடாகும்.[14] இந்த வயதுள்ள பெண்களுக்கு அறிகுறிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுன்றன என்பதைப் பொறுத்து சுமார் இரண்டு விழுக்காடு முதல் இருபது விழுக்காடு வரையான பெண்கள் பாதிப்படைகிறார்கள்.[3][15] சினைப்பை நோய்க்குறியின் முதன்மையான விளைவுகளில் ஒன்று மலட்டுத்தன்மையாகும் [4] 1721 இல் இத்தாலியில் தற்பொழுது சினைப்பை நோய்க்குறி என விவரிக்கப்படும் இந்நோய்க்குறி இருப்பதனைக் கண்டறிந்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன.[16]
அறிகுறிகள்
கீழ்க்காண்பவை சினைப்பை நோய்க்குறியின் பொதுவான அறிகுறிகளாகும்.
ஒழுங்கற்ற மாதவிடாய்: சினைப்பை நோய்க்குறியானது ஆண்டிற்கு ஒன்பதுக்கும் குறைவான மாதவிடாய் அல்லது மாதவிடாய் வராமை, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு மாதவிடாய் வராமை, பிற மாதவிடாய்க் கோளாறுகள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கிறது.[14]
மலட்டுத்தன்மை: பொதுவாக குறைவான சினைமுட்டை வெளிவருதல்.(சினைமுட்டைப் பற்றாக்குறை)[14]
ஆண் தன்மை மிகுந்து காணப்படுதல்: முகப்பருக்கள், உடலில் ஆண்களைப் போன்று (மார்பு, முகவாய் ஆகியவற்றில்) முடிவளர்ச்சி ஆகியன இதன் பொதுவான அறிகுறிகளாகும்.ஆனால் இதனால் மாதவிடாய் மிகைப்பு, முடி இழப்பு, ஆகிய அறிகுறிகளும் உருவாகக்கூடும்.[14][17] சினைப்பை நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட சுமார் மூன்றிலொரு பங்கு பெண்களுக்கு ஆண் தன்மை மிகுந்து காணப்படுவதாக ஐக்கிய அமெரிக்காவின்தேசிய குழந்தைகள் நலம் மற்றும் மனிதவளத்துறை ஆய்வொன்று (1990)) தெரிவிக்கிறது [18]
வளர்சிதை மாற்ற நோய்க்குறி: இது உடற்பருமன், இன்சுலின் எதிர்ப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு நோய்க்குறியாகும்.இதனோடும் சினைப்பை நோய்க்குறி தொடர்புடையதாகும்.[14] சினைப்பை நோய்க்குறி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்சுலின் நீர்மம், இன்சுலின் எதிர்ப்பு, ஹோமோசிஸ்டீன் ஆகியவற்றின் அளவு அதிகரித்துக் காணப்படும்.[19]
பிற இனத்தவர்களை விட ஆசிய இனத்தவர்களுக்கு சினைப்பை நோய்க்குறியின் காரணமாக உடலில் முடி வளர்ச்சியடைதல் குறைவாகவே காணப்படுகிறது.[20]
↑ 2.02.1"Is there a cure for PCOS?". US Department of Health and Human Services, National Institutes of Health. 2013-05-23. Archived from the original on 5 April 2015. Retrieved 13 March 2015.
↑Diamanti-Kandarakis E, Kandarakis H, (2006). "The role of genes and environment in the etiology of PCOS". Endocrine30 (1): 19–26. doi:10.1385/ENDO:30:1:19. பப்மெட்:17185788.
↑"Androgens in polycystic ovary syndrome: the role of exercise and diet". Seminars in Reproductive Medicine27 (4): 306–15. 2009. doi:10.1055/s-0029-1225258. பப்மெட்:19530064.