சின்னதுறை
சின்னதுறை (Chinnathurai) இந்தியாவின் தமிழ்நாடில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிற்றூராகும். இது இந்தியத் தீவகத்தினந் தெற்கு முனையில் உள்ள தூத்தூர் பேரூராட்சியின் பகுதியாகும். இதற்கு அருகாமையில் மேற்கே கேரள மாநிலத் திருவனந்தபுரமும் கிழக்கே தமிழ்நாட்டின் நாகர்கோயிலும் ஆகிய இருநகரங்கள் அமைந்துள்ளன. இது கடற்கரைப் பகுதி சார்ந்த மீன்பிடிதொழில் ஊராகும். இங்கு சுறாக்களும் பெருமீன் வகைகளும் பிடிக்கப்படுகின்றன. காலநிலைசின்னதுறை வெப்ப மண்டலக் காலநிலையைப் பெற்றுள்ளதால் இங்கு பருவ வேருபாடுகள் உணரப்படுவதில்லை. சராசரி பெரும வெப்பநிலை 34 °செ ஆகும். சராசரி சிறும வெப்பநிலை 21 °செ ஆகும். உயர் ஈரப்பதம் பருவமழியின்போது 90% ஆக அமைகிறது. கல்விசின்னதுறையில் கல்விகற்றோர் வீதம் உயர்வாக உள்ளது. 2017 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இவ்வூர் 99.5% கற்றோர் வீதத்தைப் பெற்றுள்ளது. ஆண்களின் கற்றோர் வீதம் 99% ஆகவும் பெண்களின் கற்றோர் வீதம் 100% ஆகவும் உள்ளது. இங்குள்ள உயர்வான கல்வி வளர்ச்சிக்கு கிறிஸ்தவ அமைப்புகள் காரணமாகும். தூய யூதெ கல்லூரி உயர்கல்வி வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்துள்ளது. பெரும்பாலான மக்கள் நன்கு கல்விகற்று பல பன்னாட்டுக் குழுமங்களில் பணிபுரிகின்றனர். பலர் பல அயல்நாடுகளில் வாழ்கின்றனர். இந்த ஊருக்குள்ளேயே நான்கு பள்ளிகளும் ஒரு கல்லூரியும் உள்ளன. இருபள்ளிகள் ஊருக்கு வெளியே அமைந்துள்ளன. தூய யூதெ குமுகக் கூடம்[1] பொதுக்கூடமாகப் பயன்படுகிறது. தூய யூதெ விளையாட்டுக் குழு ஒரு நூலகத்தையும் பேணுகிறது. அரசு சார்ந்த ஒரு சிறு அஞ்சலகமும், பெட்ரோல் வங்கியும் மக்களின் தேவைகளை நிறைவு செய்கின்றன. மேற்கோள்கள்உசாத்துணை |
Portal di Ensiklopedia Dunia