சின்னமைல் அசிட்டேட்டு
சின்னமைல் அசிட்டேட்டு (Cinnamyl Acetate) என்பது C11H12O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 3-பீனைல்புரோப்-2- யீனைல் அசிட்டேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் சின்னமைல் எசுத்தர் குடும்பத்தின் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். மாறுபடும் ஆல்கைல் குழு இங்கு ஒரு மெத்தில் குழுவால் மாற்றப்படுகிறது. அரோமேடிக் தன்மையற்ற கார்பன்-கார்பன் இரட்டைப் பிணைப்பு தோன்றுவதன் விளைவாக, சின்னமைல் அசிட்டேட்டு இசட் மற்றும் ஈ மாற்றிய அமைப்பைக் கொண்டிருக்கலாம்.[8]. சின்னமைல் எசுத்தர் (ஈ) மற்றும் (இசட்) சின்னமைல் அசிட்டேட்டின் மாற்றியன்கள். புதிய இலவங்கப்பட்டையில் சின்னமைல் அசிட்டேட்டு இயற்கையில் தோன்றுகிறது. இதில் சின்னமைல் அசிட்டேட்டின் செறிவு மில்லியனுக்கு 2800 முதல் 51000 பகுதிகள் என்ற அளவில் இருக்கிறது[9]. சின்னமைல் அசிட்டேட்டு ரொட்டி தயாரித்தலின் போது பயன்படுத்தப்படும் வாசனை எசுத்தராகும். எடுத்துக்காட்டாக, ரொட்டி மற்றும் விலங்குத் தீவனம் போன்றவற்றிற்கு இனிமையான பழ வாசனையைத் தருகிறது. மேலும், இது பல அழகுசாதனப் பொருட்களிலும், சில கழிப்பறை பயன்பாடுகளிலும், தூய்மையாக்கிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.[8]. தயாரிப்புஅசிட்டிக் அமிலத்துடன் சின்னமைல் ஆல்ககால் முறையாக ஒடுக்கப்படுவதன் விளைவாக தயாரிக்கப்படுகிறது. சட்டம் மற்றும் கட்டுப்பாடுசின்னமைல் அசிடேட்டு, வாசனை திரவியங்களிலும் உணவிற்கான சுவை மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது பல நிறுவனங்களால் விவாதிக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டில், ஃப்ளேவர் அண்ட் எக்ஸ்ட்ராக்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் ( ஃபெமா ) இந்த சேர்மத்தைப் பொதுவான, பாதுகப்பான சுவையூட்டும் மூலப்பொருளாக அங்கீகரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டது. பாதுகாப்பானது என்று கருதப்பட்ட பல தயாரிப்புகளில் சராசரி அதிகபட்ச பயன்பாட்டு நிலைகளை சங்கம் தீர்மானித்தது: [10] உற்பத்தி மற்றும் உட்கொள்ளல்சின்னமைல் அசிடேட்டின் சராசரி ஆண்டு உற்பத்தி மற்றும் வாசனைப் பொருளாக சின்னமைல் அசிடேட்டின் தினசரி உட்கொள்ளல் உலக சுகாதார அமைப்பினால் அறிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, ஐரோப்பாவில் இதன் ஆண்டு உற்பத்தி 1498 கிகி மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 2255 கிகி என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சேர்மத்தின் தினசரி உட்கொள்ளல் அளவு ஐரோப்பாவில் 210 மைக்ரோ கிராம் ஆகவும், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 300 மைக்ரோ கிராமாகவும் மதிப்பிப்பட்டுள்ளது. ஐரோப்பியர்களுக்கு உடல் எடையின் படியான உட்கொள்ளலானது 4 மைக்கரோகிராம்/கிகி ஆகவும் அமெரிக்கர்களுக்கு 5 மைக்ரோகிராம்/கிகி ஆகவும் உள்ளது.[11] தொகுப்பு முறை தயாரிப்புசின்னமைல் அசிடேட்டு இயற்கையாகவே தாவரங்களில் காணப்படுவதால், அதைப் பிரித்தெடுத்து சுத்திகரிக்கலாம். இருப்பினும், இது குறைந்த அளவு விளைச்சலைக் கொண்டுள்ளதால், எனவே உற்பத்தி செலவுகள் அதிகமாகும். வேதி முறைகளைப் பயன்படுத்துவது சின்னமைல் அசிடேட்டு தயாரிக்க மிகவும் திறன் வாய்ந்த உத்திகளை வழங்க முடியும். சின்னமைல் அசிடேட்டு 2 ஐத் தயாரிக்க பலவிதமான முறைகள் உள்ளன'. இவற்றில் ஒரு வழி சின்னமைல் ஆல்ககால் 1 மற்றும் வினைல் அசிடேட்டு ஆகியவற்றில் இருந்து தயாரிப்பதாகும். இந்த வினையானது எசுத்தர் பிணைப்பின் மீது குறிப்பான வினையைக் கொண்ட லைப்பேசு வகையைச் சார்ந்த மூஅசைல்கிளிசெரால் எசுத்தர் ஐதரோலேசு என்ற நொதியால் வினையூக்கம் செய்யப்படுகிறது. இந்த வினையின் துணை விளைபொருளானது அசிட்டால்டிகைடாகும். இந்த வினையின் சமன்பாடானது:[12] அசிட்டால்டிகைடானது தொகுப்பு முறைத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் லைப்பேசின் மீது ஒரு விரும்பத்தகாத செயலிழக்கச் செய்யும் விளைவைக் கொண்டிருப்பதால், வினைல் அசிட்டேட்டிற்குப் பதிலாக எத்தில் அசிட்டேட்டு பயன்படுத்தப்படலாம். இந்த பதிலீட்டு எசுத்தராக்குதல் வினையில் சின்னமைல் ஆல்ககால் 1 உடன் எத்தில் அசிட்டேட்டு வினைபுரிந்து சின்னமைல் அசிட்டேட்டு 2 மற்றும் எத்தனாலைத் தருகிறது. இந்த தொகுப்பு முறைக்கு லைப்பேசு நோவோசிம் 435 தேவைப்படுகிறது, மேலும் இந்த தொகுப்பு முறையானது கரைப்பான் அற்ற அமைப்பில் நிகழ்த்தப்படுகிறது. இந்த வினையானது பின்வருமாறு: மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia