சிர்கோனியம் டெட்ராபுளோரைடு
சிர்கோனியம் (IV) புளோரைடு, ZrF4 என்ற மூலக்கூறு வாய்பாட்டை உடைய ஒரு கனிம வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் ZBLAN எனப்படும் புளோரைடு கண்ணாடியின் ஒரு பகுதிப் பொருளாகும். இச்சேர்மம் தண்ணீரில் கரையாத தன்மை உடையது. இச்சேர்மம், புளோரோசிர்கோனேட் கண்ணாடிகளின் முக்கியமான பகுதிப்பொருளாகவும் உள்ளது. ![]() ZrF4 சேர்மத்திற்கு மூன்று படிக நிலைகள் அறியப் பட்டுள்ளன. அவை, α (ஒற்றைச் சாய்வு), β (நான்முகி, பியர்சன் குறியீடு tP40, தளவெளிக்குழு P42/m, எண். 84) மற்றும் γ (அறியப்படாத வடிவம்). β மற்றும் γ நிலைகள் நிலைத்தன்மையற்றவையாகவும், மேலும் 400 °செ வெப்பநிலையில், மீண்டும் மாற இயலாத மாற்றத்தின் மூலம் α வடிவம் அல்லது நிலைக்கு மாற்றமும் அடைகின்றன.[2] வடித்திறக்கல் அல்லது பதங்கமாதல் முறையைப் பயன்படுத்தி சிர்கோனியம் புளோரைடை துாய்மைப்படுத்தலாம்.[3] தவிர்க்கப்பட வேண்டிய நிலைகள் மற்றும் பொருட்கள்: ஈரப்பசை, செயலுறு உலோகங்கள், காடிகள் மற்றும் ஆக்சிசனேற்றிகள். பயன்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia