சிறுகிளை![]() சிறுகிளை என்பது ஒரு மரத்தின், அல்லது புதரின் மெல்லிய, பெரும்பாலும் குறுகிய கிளை ஆகும்[1]. சிறுகிளைகளில் காணப்படும் மொட்டுகள் மற்றும் இலைகள் உதிர்ந்த வடுக்கள் இவற்றின் முக்கியமானதொரு தனி பண்பாகும். சிறுகிளையின் தடிமன், அதில் இருக்கக்கூடிய சிறுகுழிகளின் தன்மை, பட்டையின் நிறம், நயம், மற்றும் மரப்பட்டையின் வடிவமைப்பு ஆகியவையும் முக்கியத்துவம் வாய்ந்தவை[2]. இரண்டு வகையான சிறுகிளைகள் உள்ளன: தாவர சிறுகிளைகள் மற்றும் கனியுறும் தண்டுகள். கனியுறும் தண்டுகள் சிறப்புக் கிளைகளாகும், அவை பொதுவாக பக்கக் கிளைகளிலிருந்து கிளைத்து, தட்டையாக மற்றும் மெதுவாக வளரும், கடந்த கால பருவங்களின் ஆண்டு வளைய அடையாளங்களுடன் இருப்பவை. ஒரு கிளையின் வயது மற்றும் வளர்ச்சி விகிதத்தை, குளிர்கால நுனி மொட்டுகள், செதில் இலைகளின் வடுக்கள் அல்லது கிளைவட்டம் முழுதுமுள்ள ஆண்டு வளையங்களை கணக்கிடுவதன் மூலம் கணக்கிடலாம். சிறுகிளைகளின் பயன்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia