சிறுநீர்ப்பை இடைத்திசு அழற்சி(ஐசி), அல்லது சிறுநீர்ப்பை வலி நோய்க்குறி(BPS) என்றழைக்கப்படும் ஒரு வகை அழற்சி சிறுநீர்ப்பையைப் பாதிக்கும் அழற்சியாகும். இதனால் உடனே சிறுநீர் கழிக்க வேண்டும் என்று உணருவது, அடிக்கடி சிறுநீர் கழிக்ப்பது, மற்றும் உடலுறவில் வலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்நோய்க்குறி மனச்சோர்வு மற்றும் குறைந்த வாழ்க்கைத் தரத்துடன் தொடர்புடையது. பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் ஃபைப்ரோமியால்ஜியாவும் உள்ளன.[1]
சிறுநீர்ப்பை இடைத்திசு அழற்சிக்கான காரணம் அறியப்படவில்லை. [1] இந்த அழற்சி நோய்க்குறி தொடங்கியவுடன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. நோயறிதல் பொதுவாக மற்ற நிலைமைகளை நிராகரித்த பின்னர் ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக சிறுநீர்ச் சோதனையில் எதிர்மறை என்றிருக்கும். சிஸ்டோஸ்கோபியில் வயிற்றுப் புண் அல்லது வீக்கம் காணப்படலாம். சிறுநீர் பாதை நோய்த்தொற்று (யுடிஐ), அதிகப்படியான சிறுநீர்ப்பை, பால்வினை நோய்த்தொற்றுகள், இடமகல் கருப்பை அகப்படலம், சிறுநீர்ப்பை புற்றுநோய் மற்றும் சுக்கில அழற்சி ஆகியவை இதே போன்ற அறிகுறிகளை உருவாக்கக்கூடிய பிற நிலைமைகள் ஆகும்.
சிறுநீர்ப்பை இடைத்திசு அழற்சிக்கான எந்த சிகிச்சையும் இல்லை. [1] அறிகுறிகளை நிவாரணப் படுத்தக்கூடிய சிகிச்சையில் வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள் அல்லது நடைமுறைகள் ஆகியவை அடங்கும். வாழ்க்கை முறை மாற்றங்களில் புகைபிடிப்பதை நிறுத்துதல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவை அடங்கும். மருந்துகளில் இப்யூபுரூஃபன், பென்டோசன் பாலிசல்பேட் அல்லது அமிட்ரிப்டைலைன் ஆகியவை இருக்கலாம். நடைமுறைகளில் சிறுநீர்ப்பை விலகல், நரம்பு தூண்டுதல் அல்லது அறுவை சிகிச்சை ஆகியவை அடங்கும். இதில் இடுப்புப் பயிற்சிகள் மற்றும் நீண்ட கால நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படுவதில்லை.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும், சுமார் 0.5% மக்கள் இவ்வகை அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [1] ஆண்களை விட பெண்கள் ஐந்து மடங்கு அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக நடுத்தர வயதில் இந்த அழற்சியானது தொடங்குகிறது. "சிறுநீர்ப்பை இடைத்திசு அழற்சி" என்ற சொல் முதன்முதலில் 1887 இல் பயன்பாட்டுக்கு வந்தது.[2]
அறிகுறிகள்
சிறுநீர்ப்பை இடைத்திசு அழற்சியின் மிகவும் பொதுவான அறிகுறிகள் சூப்பராபூபிக் சிறுநீர் வடிகுழாயில் வலி ஏற்படுதல் ஆகும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், வலிமிகுந்த உடலுறவு, [7] மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டுமென்ற உணர்வால் தூக்கத்திலிருந்து சிறுநீர் கழிக்க எழுந்திருத்தல் .
பொதுவாக, அறிகுறிகள் இவற்றை உள்ளடக்கியதாக இருக்கலாம் [8] அதாவது சிறுநீர் கழிக்கும்பொழுது சிறுநீர்க்குழாயில் எரிச்சலுடன் கூடிய ஒரு வலி, அவசரமாக உடனே சிறுநீர்க்கழிக்க வேண்டுமென்ற உணர்வு, சில உணவுகள் அல்லது பானங்கள் உட்கொள்வதால் மோசமடையும் இடுப்பு வலி, சிறுநீர் அவசரம் மற்றும் சிறுநீர்ப்பை அல்லது இடுப்பில் உள்ள அழுத்தம் ஆகியவை அடங்கும். அடிக்கடி விவரிக்கப்படும் பிற அறிகுறிகள் சிறுநீர் தாமதமாக வெளியேறுதல் (சிறுநீர் ஓட்டம் தொடங்குவதற்கு காத்திருக்க வேண்டியது, பெரும்பாலும் இடுப்புப் பகுதிகளில் செயலிழப்பு மற்றும் பதற்றம் காரணமாக ஏற்படுகிறது), மேலும் வாகனம் ஓட்டுதல், வேலை செய்தல், உடற்பயிற்சி செய்தல் அல்லது பயணம் செய்தல் ஆகியவற்றில் அசௌகரியம் இருக்கும்.. ஐ.சி உள்ளவர்கள் அனுபவிக்கும் இடுப்பு வலி பொதுவாக சிறுநீர்ப்பை நிரம்புவதன் மூலம் மேலும் தீவிரமடைகிறது. சிறுநீர் கழிப்பதன் மூலம் இது சற்று மேம்படக்கூடும்.
சிஸ்டோஸ்கோபியின் போது, சிறுநீர்ப்பை இடைத்திசு அழற்சி கொண்ட 5-10% பேருக்கு ஹன்னரின் வயிற்றுப் புண்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. [9] அழற்சி கொண்ட ஒருவருக்கு சிறுநீர்க்குழாயில் மட்டுமே அசௌ கரியம் ஏற்படக்கூடும், மற்றொருவர் முழு இடுப்பு வலியிலும் போராடக்கூடும். குறிப்பிடத்தக்க: சிறுநீர்ப்பை இடைத்திசு அழற்சி நோய் அறிகுறிகள் வழக்கமாக இரண்டு வடிவங்களில் ஏற்படுகின்றன சூப்பராபூபிக் சிறுநீர் வடிகுழாயில் அதிக வலி அல்லது குறைந்த அளவு வலி. இருப்பினும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் அதிகரிக்கும்.[10]
↑Moutzouris, D.-A; Falagas, M. E (2009). "Interstitial Cystitis: An Unsolved Enigma". Clinical Journal of the American Society of Nephrology4 (11): 1844–57. doi:10.2215/CJN.02000309. பப்மெட்:19808225.