சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி
![]() சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி (SSN) தமிழ்நாட்டில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி. 1996ம் ஆண்டு எச்.சி.எல் கணினி நிறுவனத்தின் நிறுவனர் சிவ நாடாரால் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி NBAவின் ஐ.எசு.ஓ 9001:2000 தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. இக்கல்லூரியில் மொத்தம் எட்டு வகையான பொறியியல் படிப்புகள் உள்ளன. வரலாறுசிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி 1996'இல் துவங்கப்பட்டது. இக்கல்லூரி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னையுடன் சேர்க்கப்பெற்றது. இக்கல்லூரியை துவங்கியவர் பத்ம பூசண் முனைவர்.சிவ நாடார், தொழிலதிபர், எச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனரும் தலைவருமாவார். இக்கல்லூரி 2011 இல் இந்தியாவின் முதல் 75 பொறியியல் கல்லூரிகளில் 38வது இடத்திலிருப்பதாக அவுட்லுக் இதழ் பிரசுரித்தது.[1]. அமைவிடம்இக்கல்லூரி 1996ஆம் ஆண்டில், தற்காலிகமாக சென்னையின் சுற்றுபுறத்தில் உள்ள துரைப்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் 1998ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி சாலையில் (பழைய மாம்மல்லபுரம் சாலை) உள்ள காலவாக்கத்தில் (திருப்போரூர் பஞ்சாயத்து) 1 சதுர கிலோ மீட்டர் அளவு உள்ள பெரிய நில பரப்பில் இட மாற்றம் செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இக்கல்லூரி நடத்துனர்கள் நான்கு கோடி மதிப்புள்ள கல்வி உதவித்தொகையைத் தகுதி உடைய மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். இங்கு "வாக்'இன்-வாக்'அவுட்" கல்வி உதவி தொகையைப் பள்ளி தேர்வுகளில் முதல் பத்து மதிப்பெண்கள் பெற்ற கிராமத்து மாணவ-மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது. இம்மாணவ-மாணவியர்களின் முழு செலவைக் (கல்லூரி விடுதி செலவுகள் உட்பட) கல்லூரி நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது. வசதிகள்![]() ![]()
![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia