சிவெத்லானா சவீத்சுக்கயா
சிவெத்லானா யெவ்கேனியெவ்னா சவீத்ஸ்கயா (Svetlana Yevgenyevna Savitskaya, உருசியம்: Светла́на Евге́ньевна Сави́цкая; பிறப்பு: ஆகத்து 8, 1948), என்பவர் முன்னாள் சோவியத் விண்வெளி வீராங்கனை ஆவார். இவர் சோயூசு டி-7 விண்கலத்தில் 1982 இல் முதற் தடவையாகப் பயணித்தார். இவரே விண்ணுக்குச் சென்ற இரண்டாவது பெண்ணாவார். (வலண்டீனா டெரெஷ்கோவா முதலாவதாகச் சென்றார்). சல்யூத் 7 விண்வெளி நிலையத்தில் 1984 சூலை 25 இல் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார். இவர் விண்வெளி நிலையத்துக்கு வெளியே 3 மணி 35 நிமிடங்கள் நேரம் நின்றிருந்தார்.[1][2] இரண்டு தடவைகள் "சோவியத் வீரர்" என்ற நாட்டின் உயர் விருதினையும் பெற்றார்.[3] சவீத்ஸ்கயா விண்வெளித் திட்டப் பணிகளில் இருந்து 1993 இல் ஓய்வு பெற்றார். உருசியக் கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உருசிய நாடாளுமன்றத்தில் உறுப்பினரானார். தொடர்ந்து நான்கு தடவைகள் இவர் உருப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia