சீனா மீதான மங்கோலியப் படையெடுப்புசீனாவின் மீதான மங்கோலிய படையெடுப்பு என்பது சீன பகுதிகளுக்குள் மங்கோலிய பேரரசு ஊடுருவுவதற்காக நடத்திய தொடர்ச்சியான ராணுவ முயற்சிகளை குறிப்பதாகும். இம்முயற்சிகள் பதிமூன்றாம் நூற்றாண்டில் ஆறு தசாப்தங்களுக்கு நடைபெற்றன. இந்நிகழ்வு சின் அரசமரபு, மேற்கு சியா, தலி ராச்சியம், தெற்கு சாங் மற்றும் கிழக்கு சியா ஆகிய அரசுகளின் தோல்விகளை உள்ளடக்கியதாகும். இவை 1205 மற்றும் 1207 ஆம் ஆண்டு மேற்கு சியா மீது தாக்குதல்களை செங்கிஸ் கான் ஆரம்பித்ததிலிருந்து தொடங்குகின்றன.[1] 1279 ஆம் ஆண்டு மங்கோலிய தலைவர் குப்லாய் கான் சீனாவில் யுவான் அரசமரபை தோற்றுவித்து கடைசியாக எஞ்சியிருந்த சாங் அரச மரபின் எதிர்ப்பை நொறுக்கினார். இவ்வாறாக அனைத்து சீன பகுதிகளும் மங்கோலிய யுவான் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன. சீன வரலாற்றில் முதல் முறையாக சீனா முழுவதும் வெல்லப்பட்டு ஒரு அயல்நாட்டவர் அல்லது சீனர் அல்லாத ஆட்சியாளரால் ஆளப்பட்டது.[2] உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia