சுட்டி![]() ்இணைப்புவடம்
கவுமபார்க்கவு என்பது கணினிக்குத் தகவலை உள்ளீடு செய்ய உதவும் ஒரு வெளிப்புறக் கருவி ஆகும்த்திரையில் தோன்றும் எழுத்துகளையும் படங்களையும் இக்கருவி சுட்ட வல்லது. கைக்கடக்கமான பேழையாகிய இச்சுட்டி, படத்தில் காட்டப்பட்டுள்ளது போல அதன் மேல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொத்தான்களைக் கொண்டிருக்கும். இச்சுட்டியைத் தட்டையான ஒரு பரப்பில் வைத்து நகர்த்துவதன் மூலம் கணினித் திரையிலுள்ள படம் அல்லது எழுத்து போன்ற ஓர் உருப்படியின் நகர்வை நாம் கட்டுப்படுத்தலாம். அதுமட்டுமின்றி, சுட்டியைக் கொண்டு நாம் திரையில் காணப்படும் பொருள்களைத் தேர்தெடுக்கலாம்; அப்பொருளை நகர்த்தலாம். (computer mouse) என்பது கணினித் திரையின் ஒளிர்சுட்டியைக் கையால் இயக்கும் சுட்டல் கருவியாகும். இது ஒரு தட்டையான பரப்பின் மேல் அமையும் இருபருமான இயக்கத்தை கணினிக் காட்சித்திரையில் உள்ள சுட்டியின் இயக்கமாக மாற்றுகிறது. இது வரைபடப் பயனர் இடைமுகப்பை தொடர்ந்து கட்டுபடுத்தவும் உதவுகிறது. கணினி அமைப்பைக் கட்டுபடுத்தும் சுட்டியின் முதல் பொதுமக்களுக்கான செயல்விளக்கம் 1968 இல் நிகழ்த்தப்பட்டது. முதலில் இது கணினியுடன் கம்பியால் அல்லது வடத்தால் இணக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது கம்பியால் இணைக்கப்படுவதில்லை. மாறாக, சுட்டி இப்போது தான் இணைந்த அமைப்போடு குறுநெடுக்க வானொலி தொடர்பு முறையால் தொடர்பு கொள்கிறது. முதலில் கணினியின் சுட்டி இயக்கத்தைக் கட்டுபடுத்த, ஒரு தட்டையான பரப்பின் மீது உருளும் பந்து பயன்பட்டது. ஆனால், இன்று சுட்டி, இயக்கப் பகுதிகள் ஏதும் இல்லாத, ஒளியியல் உணரிகள் வழி செயல்படுகிறது. கணினித் திரைச் சுட்டியை இயக்குவதோடு, சுட்டி வேறு சில இயக்குதல்களை மேற்கொள்ள ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பொத்தான்கள் சுட்டியில் உள்ளன. அவ்வகை இயக்குதல்கள் காட்சித்திரை பட்டியலில் உள்ள உருப்படிகளைத் தேர்ந்தெடுத்தல் நகர்த்தல் போன்றனவாகும். சுட்டி சுட்டுதலைத் தவிர தொடுபரப்பாகவும் சக்கரமாகவும் உள்ளீட்டு அளவைக் கட்டுபடுத்தலும் போன்ற சில கூடுதல் கட்டுபாட்டுப் பணிகளைச் செய்யவும் பயன்படுகிறது. பெயரீடுசுட்டி கணினியின் சுட்டல் கருவியாக பொறியாளர் பில்லின் 1965 ஜூலை மாத "Computer-Aided Display Control" எனும் வெளியீட்டில் வருகிறது.[1][2][3] சுட்டி (mouse) என்பதன் பன்மை வடிவம் சூட்டிகள் (mice) ஆகும். ஆனாலும், ஆங்கிலத்தில் கணினியின் சுட்டிகள் mouses, mice ஆகிய இரண்டும் வழக்கில் இருந்தாலும் mice என்பதே பெருவழக்காக அமைகிறது.[4] கணினியின் சுட்டி mice எனும் பன்மை வடிவில் ஆக்சுபோர்டு அகரமுதலியின் இணையப் பதிப்பில் 1984 இல் வருகிறது. அதற்கு முன்பு இவ்வழக்கு ஜே, சி. ஆர். இலிக்லைடரின் "The Computer as a Communication Device" எனும் வெளியீட்டில் 1968 இலேயே வந்துள்ளது.[5] சில வேளைகளில் mouses எனும் சொல்லும் அவ்வப்போது வழங்குவதும் உண்டு. நாளடைவில் mice, mouses இரண்டும் வழங்கும்போது அவற்றுக்கிடையில் பொருள் வேறுபாடும் ஆங்கிலத்தில் உருவாகிவிட்டது. வரலாறுகணினிச் சுட்டியை ஒத்த உருள்பந்து 1946 இல் சுட்டல் கருவியாக இலால்ப் பெஞ்சமின் இரண்டாம் பெரும்போருக்குப் பின் புதிதாக புனைந்து திக்கட்டுபாட்டு இராடார் வரைவு அமைப்பில் பயன்படுத்தினார். இந்த அமைப்பு எளிய காட்சி அமைப்பு எனப்பட்டது. பின்னர், இவர் பிரித்தானிய அரசு நாவாய் அரிவியல் துறையில் பணிபுரிந்தார். இவரது திட்டம் இலக்கு வானூர்தியின் எதிர்கால இருப்புகளைப் பல உள்ளீடுகளுக்குக் கண்டறிய ஒப்புமைக் கணினிகளைப் பயன்படுத்தினார். இந்தப் பல உள்ளீடுகளை இவர் ஜாய்சுடிக் எனும் அமைப்பால் உள்ளிட்டார். அப்போது இப்பணிக்கு 9மாறு உள்ளீட்டுப் பணிக்கு) மேலும் நுட்பம் வாய்ந்த அமைப்பு ஒன்றின் தேவையை உணரலானார். எனவே தான் இவர் இந்நோக்கத்துக்காக உருள்பந்து சுட்டல் கருவியை வடிவமைத்துள்ளார்.[6][7] இக்கருவிக்கான பதிவுரிமம் 1947 இல் பெறப்பட்டது.[7] இதன் முதனிலை வடிவம் இரு தொயவம் பூசிய இருக்கைகள் மீது உருளும் பொன்மப் பந்தாக அமைந்த்து. இது படைத்துறையின் கமுக்கமாக பாதுகாக்கப்பட்டது.[6] தாம் கிரான்சுடனுடனும் பிரெடு இலாங்சுடாப்புடனும் இணைந்து மற்றொரு தொடக்கநிலை உருள்பந்து வடிவமைப்பைப் பிரித்தானிய மின்பொறியாளராகிய கென்யான் தெய்லர் உருவாக்கினார். தெய்லர் முதலில் கனடிய பெராண்டி குழுமத்தில் இருந்தார். பின்னர் இவர் 1952 இல் கனடிய அரசு நாவாய்த் (கப்பல்படைத்) துறையின் இலக்கவியல் தன்னியக்க தடங்காணலும் பிரித்துணர்தலும் DATAR (Digital Automated Tracking and Resolving) திட்டத்தில் பணியாற்றினார்.[8] DATAR வடிவமைப்பு பெஞ்சமின் காட்சித்திரைக் கருத்துப்படிமத்தை ஒத்ததே. இந்த உருள்பந்து இயக்கத்தைப் பற்றிக்கொள்ள, X அச்சுக்கு இரண்டும் Y அச்சுக்கு இரண்டுமாக நான்கு வட்டுகளைப் பயன்படுத்தியது. எந்திரவகைத் தாங்கலுக்காக பல உருளிகள் செயல்பட்டன. பந்து உருட்டப்படும்போது, பற்றிக்கொள்ளும் வட்டுகள் தற்சுழற்சிக்கு ஆட்பட்டு புற விளிம்பைத் தொடுகின்றன. இப்புறவிளிம்பு குறிப்பிடா அலைவு நேர இடைவெளியில் கம்பியைதொடும். அப்போது பந்தின் ஒவ்வொரு இயக்கத்துக்கும் (தொடுகைக்கும்) மின் துடிப்பு தோன்றி வெளியிடப்படும். இந்த்த் துடிப்புகளைக் கணக்கிட்டு பந்தின் புறநிலையான இயக்கத்தைத் தீர்மானிக்கலாம். ஒரு இலக்கவியல் கணினி இந்த இயக்கங்களை க் கணக்கிட்டு வரும் தரவுகளைத் துடிப்புக் குறிமுறைக் குறிகையேற்ற வானொலித் தொடர்பு வழியாக மற்ற படைப்பணி மேற்கொள்ளும் கப்பல்களுக்கு அனுப்பும் . இந்த உருள்பந்து வடிவமைப்பு செந்தரக் கனடிய ஐந்தூசிவகை கிண்னவடிவப் பந்தாகும். இது கப்பல்படைத் துறையின் கமுக்கமான திட்டமாக இருந்தமையால், இதற்குப் பதிவுரிமம் ஏதும் பெறப்படவில்லை.[9][10] ![]() தியேரி பார்தினி வெளியிட்ட நூல்களில் செந்தர ஆராய்ச்சி நிறுவனத்தை (இன்றைய SRI International) சேர்ந்த தவுகிளாசு எங்கல்பாட்டும்,[11] பவுல் செரூசியும்[12] ஓவார்டு இரீங்கோல்டும்,[13] மேலும் பலரும்[14][15][16] கணினிச் சுட்டி கண்டுபிடிப்பாளர்களாக கூறப்படுகின்றனர். எங்கல்பார்ட்டு 2013 இல் இறந்ததும் அவருக்கான பல் நினைவேந்தல்களில் சுட்டியின் புதுப்புனைவாளராகப் பராட்டப்பட்டுள்ளார்.[17][18][19][20] மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia