சுவர் அழுத்தத் தளர்வுசுவர் அழுத்தத் தளர்வு (Wall stress relaxation) என்பது செல்சுவர் விரிவாக்கத்தில் ஒரு முக்கியமான காரணியாகும். சுவர் அழுத்தத் தளர்வு (ஓரலகில் செலுத்தப்படும் விசையால் அளக்கப்படுகிறது) தாவர செல்லின் டர்கர் அழுத்தத்தால் உருவாக்கப்படுகிறது.[1] டர்கர் அழுத்தமானது தாவரங்கள், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களின் கலச்சுவரின் இழுவிசையை உருவாக்குகிறது. இது தாவர செல்லின் முதன்மைச் செல் சுவரை எதிர்க்கும் விதத்தில் அமைகிறது. இது செல் சுவரின் இழுவையை அனுமதிக்கிறது.[2] செல்சுவரின் நீட்சி அல்லது சுவரழுத்தத்தின் தளவர்வு ஆகியவை செல் விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பின் காரணத்தால் விளைகிறது. தாவரத்தின் கலச்சுவரானது நீரேற்றப்பட்ட பலபடிசார் பொருள்களாலானது. இது தாவரங்கள் மீளும் பாகுப்பண்புகளைக் கொண்டிருக்கக் காரணமாக உள்ளது.[2] ஒரு தாவரத்தின் முதன்மையான சுவரானது மாவிய இழைகள், எமிசெல்லுலோசு மற்றும் சைலோகுளுகான்கள் போன்றவற்றால் ஆனது.[1] இந்த பளு தாங்கும் வலையமைப்பானது பெக்டின்கள் மற்றும் கிளைக்கோபுரதங்களால் சூழப்பட்டுள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia