செந்நாக்குழிசெந்நாக்குழி என்பது பூமியின் நிலப்பகுதியில் காணப்படும் சிவந்த நெருப்புக் குழியைக் குறிக்கும். இரும்பு கழிவுகள் இத்தகைய செந்நாக்குழிகள் உள்ள இடங்களில் காணப்படுகின்றன. அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்படும் இவ்வாறான வட்ட வடிவிலான தொட்டிகள், குழிகள் போன்றவை இரும்பு உருக்காலைகள் இருந்ததற்கான சான்றுகளாகக் கருதப்படுகின்றன. [1] சிவகங்கை தொல் நடைக் குழு சிவகங்கை அருகாமையில் உள்ள அரசனேரி கீழ மேடு பகுதியில் இரும்பு உருக்காலை எச்சங்களை செந்நாக்குழியோடு கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளது. சூரக்குளம் புதுக்கோட்டை, அரசனேரி கீழமேடு பகுதிக்கு, இடையில் இருப்புப் பாதைக்கு அருகில் இரண்டு வட்ட வடிவிலான செந்நாக்குழிகளும் இரும்பு உருக்கு எச்சங்களும் காணப்படுகின்றன.[2] செந்நாக்குழி உள்ள பகுதியில் பெருங்கற்கால இரும்புக் கழிவுகளும் இரும்பு உருக்காலை எச்சங்களும் கணக்கிடைப்பதால் இப்பகுதியில் மிகச் சிறப்பாக இரும்பு உருக்கும் தொழிலும் ஆலைகளும் இருந்திருக்கும் என அறியமுடிகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia