செய்யுள் உறுப்புகள்

தமிழ்மொழியில், செய்யுள் உறுப்புகள் (elements of prosady} என்பவை ஒரு செய்யுளை அல்லது யாப்பை இயற்றுவதற்குத் தேவைப்படும் அடிப்படை உறுப்புகள் ஆகும். அந்த உறுப்புகள் ஆறுவகைப்படும். அவை,

  1. எழுத்து
  2. அசை
  3. சீர்
  4. தளை
  5. அடி
  6. தொடை ஆகியன வாகும்.

எழுத்து

ஒரு மொழியின் அடிப்படை உறுப்பு எழுத்து ஆகும்.

அசை

ஓர் எழுத்து, தனித்தோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் இணைந்தோ தக்க ஒலியுடன் சீருக்கு உறுப்பாகி நின்றால் அஃது அசை எனப்படும்.

அசை இரு வகைப்படும்.
  1. நேரசை
  2. நிரையசை

சீர்

அசைகள், ஒன்றோ இரண்டோ மூன்றோ நான்கோ இயைந்து நிற்பது சீராகும்.இது நான்கு வகைப்படும்.

  1. நேர் நேர்
  2. நிரை நேர்
  3. நிரை நிரை
  4. நேர் நிரை

நான்கு வகைகள்

  • ஓர் அசைச் சீர்
  • ஈரசைச் சீர்
  • மூவசைச் சீர்
  • நாலசைச் சீர்

தளை

சீர்கள், ஒன்றுடன் ஒன்று இயைந்து கட்டுப்பட்டு நிற்பது தளை எனப்படும். இத்தளை நான்கு வகைப்படும்.

  1. ஆசிரியத்தளை
  2. வெண்டளை
  3. கலித்தளை
  4. வஞ்சித்தளை

அடி வகைகள்

  1. குறளடி
  2. சிந்தடி
  3. அளவடி
  4. நெடிலடி
  5. கழி நெடிலடி

தொடை வகைகள்

  1. மோனைத் தொடை
  2. எதுகைத் தொடை
  3. முரண் தொடை
  4. இயைபுத் தொடை
  5. அளபெடைத் தொடை
  6. அந்தாதித் தொடை
  7. இரட்டைத் தொடை
  8. செந்தொடை

மேற்கோள்கள்

[1]

  1. "பொதுத் தமிழ்". சுரா பதிப்பகம். Retrieved 23 சூன் 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya