செலவழுங்குவித்தல்

தமிழ் இலக்கியத்தில், செலவழுங்குவித்தல் என்பது தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வதைத் தலைவியோ தோழியோ தடுத்து நிறுத்தும் கருப்பொருள் சார்ந்த ஒரு துறைப் பிரிவாகும். பண்டைய தமிழ் நூல்கள் அகம், புறம் என வாழ்வியல் இலக்கணம் பேசப்படுகின்றன. அதில் பிரிவு என்பது ஒரு வாழ்க்கைக்கூறாக அமைகிறது. அந்தப் பிரிவைத் தடுப்பதே செலவழுங்குவித்தல் ஆகும்.

பிரிவு வகைகள்

ஓதற் பிரிவு, தூதின் பிரிவு பகைவயிற் பிரிவு பொருள்வயின் பிரிவு என இலக்கண நூல்கள் இயம்புகின்றன. பொருள்வயின் பிரிவு என்பது தவிர்த்தற்குரியது. இந்நிலையில் தலைவன் தானே செலவழுங்குதல், தோழி செலவழுங்குவித்தல் என்னும் அகத்துறைகளாக அமைகின்றன.

சில செலவழுங்குவித்தல் எடுத்துகாட்டுகள்

குறுந்தொகை

தலைவன் செலவால் அவன் செல்லும் வழியில் அவனுக்கு உண்டாகும் துன்பம், அவன் சென்றால் தலைவிக்கு உண்டாகும் வருத்தம், பாலை நிலத்தின் வெப்பம் முதலியன பற்றி தோழி கூறி பிரிவைத் தவிர்ப்பாள். தலைவி தன்னுடன் தானும் வருவதாக கூறுமிடத்து நீரில் நிற்கும் குவளை மலர் மேல் காற்று மோதிய போது வாடாது அமையும். உமணர்களின் எருதுகள் பூட்டிய வண்டிகள் வரிசையாக நிற்பது போல் உலர்ந்துபோன கிளையை பிளப்பதற்கு வலிமையில்லாத யானை தன் துதிக்கையை வளைத்து வருத்தும் காடு உம்மொடு தலைவி வரின் அவளுக்கு நல்லது என அமைகிறது என குறுந்தொகை பாடல் செய்திகள் விளக்குகின்றன.

அகநானூறு

தலைவி அழகு நலன் பெற்று உடல் மெலிந்து, சிறிய நெற்றி, பசலைக் பாய்ந்து, பகலும் இரவும் மயங்கி மெல்லென மழை பெய்தலை ஏற்ற மலரைப் போல கண்ணீர் பெருகி வழிய தனித்து துயரால் வருந்துவாள். இனிய நகையினையும் மயிலிறகின் அடியெனத் திரண்ட முள் போன்ற கூறிய பற்களையும், சிவந்த வாயினையும், குவளை மலரையொத்த மையுண்டக் கண்ணினையும், நிலவையொத்த ஒளிபொருந்திய நெற்றியினையும், உடையவள் வருந்துவாள். இந்நிலையில் அவளைவிட்டு நீங்குதல் உமக்கு பொருந்துவதாகுமோ என வினவுகின்றாள். நிலையில்லாத பொருளுக்காக நிலைபெற்ற அன்பிற்குரிய தலைவியை பிரிதல் கூடாது என்று செலவழுத்துவிக்கிறாள்.

கலித்தொகை

என் சொல்வரைத் தங்கினார் காதலோரே எனச் சுட்டும் தோழியின் கூற்று பாலைக்கலிப் பாடலில் இடம் பெறுகிறது. மேலும் தூதிற் பிரிவு, ஓதற் பிரிவு, ஓராண்டி=ல் இருந்து மூன்றாண்டிற்குள் முடிவதால் இப்பிரிவு அரசன் பொருட்டும், கல்வியின் பொருட்டும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அமைகிறது.

மேற்கோள்கள்

1. குறுந்தொகை

2. அகநானூறு

3.கலித்தொகை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya