சேத்தன் பகத் (Chetan Bhagat) [1] (பிறப்பு 22 ஏப்ரல் 1974) [2] ஓர் இந்திய எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் யூடியூபர் ஆவார். 2010இல் டைம் இதழின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பெற்றர்.[3][4]
கல்வி
சேத்தன் பகத் இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லியில்இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்றார், பின்னர் இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்தில்பிஜிபி படித்தார்.[5] ஒரு முதலீட்டு வங்கியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு எழுத்துப் பணிக்காக அந்தப் பணியினைத் தொடரவில்லை. பத்து புதினங்கள் மற்றும் மூன்று புனைகதை அல்லாத புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது முதல் புதினமான ஃபைவ் பாயிண்ட் சம்ஒன் 2004 இல் வெளியிடப்பட்டது.
பின்னர் இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் (IIMA) சைந்தையிடல் வணிக நிர்வாகத்தில் 1997 இல் பட்டம் பெற்றார் [9][10] ஜூன் 2018 இல், கலை மற்றும் பொழுதுபோக்கு பிரிவில் அவருக்கு "இளம் முன்னாள் மாணவர் சாதனையாளர் விருது 2018" ஐ IIMA வழங்கியது.[11][12]
தொழில் வாழ்க்கை
சேத்தன் பகத்தின் ஐந்து புதினங்கள் திரைப்படமாக வெளியானது. 2008 இல் ஹலோ ( ஒன் நைட் @ தி கால் சென்டரை அடிப்படையாகக் கொண்டது), 2009 இல் 3 இடியட்ஸ் ( ஃபைவ் பாயிண்ட் சம்யோனை அடிப்படையாகக் கொண்டது), கை போ சே! 2013 இல் ( தெ 3மிஸ்டேக்ஸ் இன் மை லைஃப் என்பதனை அடிப்படையாகக் கொண்டது); 2014 இல் 2 ஸ்டேட்ஸ் ( 2 ஸ்டேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் அடிப்படையாகக் கொண்டது) மற்றும் 2017 இல் ஹாஃப் கேர்ள்பிரண்ட் ( ஹாஃப் கேர்ள்பிரண்ட் அடிப்படையாகக் கொண்டது). பகத் 2014 இல் கிக் ,காய் போ சே! மற்றும் ஹாஃப் கேர்ள்பிரண்ட் போன்ற பாலிவுட் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் மற்றும் .[13] 014 இல் 59வது ஃபிலிம்பேர் விருதுகளில்கை போ சே படத்திற்காக பகத் சிறந்த திரைக்கதைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.[14]
வரவேற்பு
பகத், தனது எழுத்துத் திறமைக்காக விமர்சிக்கப்பட்டார்.[15]ஒன் இந்தியன் கேர்ள் புதினத்திற்காக 2017 இல் படைப்புத்திருட்டு குற்றச்சாட்டுக்கு ஆளானார், ஆனால் அதை பகத் மறுத்தார்.[16][17]
செப்டம்பர் 2017 இல் பல்கலைக்கழகம் இந்த முடிவை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்தது.[21][22]ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஸ்வேதா கௌஷல், பகத் புத்தகங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டு பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒரு கட்டுரை எழுதினார்.[4]