சேரமான் ஜும்மா பள்ளிவாசல்
சேரமான் சும்மா மசூதி (Cheraman Juma Masjid) இந்திய மாநிலமான கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூர் என்ற ஊரில் உள்ளது.[1] இது கி.பி 612-ம் ஆண்டு மாலிக் பின் தீனார் என்பவரால் கட்டப்பட்டது.[2] இது இந்தியாவின் முதல் பள்ளிவாசல் மற்றும் உலகின் இரண்டாவது சும்மா பள்ளிவாசல் ஆகும். இதன் பழைய தோற்றம் மற்ற உலக பள்ளிவாசல்கள் போல் அல்லாமல் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பெயர் காரணமும் வரலாறும்![]() இவ்வாறு சேரமான் பெருமாள் அவர்களின் உதவியினால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மசூதி, சேரமான் அவர்களை நினைவு கூறும் பொருட்டு சேரமான் சும்மா பள்ளிவாசல் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது. கட்டுமான அமைப்புஇந்து கட்டிடக்கலையை ஆதாரமாகக் கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசூதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கிக் கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கிக் கட்டப்பட்டுள்ளது). இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.[3] சிறப்புகள்இன்றும் இந்த மசூதி சேரமான் பெருமாளின் வம்சத்தினராண கொச்சின் அரச குடும்பத்தினருக்கு முதல் மரியாதை கொடுக்கிறது. இங்கு மிகவும் பழமையான ஒரு தாமிர விளக்கு உள்ளது. மேலும் இங்குள்ள ரோசுவுட் சொற்பொழிவு மேடையும் (மிம்பர் படி) கரும்பளிங்குக் கற்களும் மிகவும் பழமையானதாகும். இதில் கரும்பளிங்குக் கற்கள், மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்டதாக நம்பப்படுகிறது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia