சேலம் மாநகரத் தந்தைகள் பட்டியல்
சேலம் மாநகரத் தந்தை (Mayor of Salem) என்பவர் தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாநகரின் முதல் குடிமகன் ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் என்ற பதவிக்குரியவரான இவர் சேலம் மாநகராட்சியின் 60 மாமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நகரத்தின் தலைமை நிர்வாகியாக பொறுப்பு வகிக்கிறார்.[1] 2006-ஆம் ஆண்டு மேயரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை நீக்கப்பட்டது. தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 2011 ஆம் ஆண்டு நேரடித் தேர்தல் முறை மீண்டும் கொண்டுவரப்பட்டது.[2] தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தொடர்ச்சியான தாமதம் ஏற்பட்டமையால் மாநிலத்தில் உள்ள மற்ற மேயர்களைப் போலவே சேலம் மேயர் பதவியும் 25 அக்டோபர் 2016 முதல் 4 மார்ச் 2022 வரை காலியாக இருந்தது. 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த ஆ. இராமச்சந்திரன், சேலத்தின் ஆறாவது மேயராக 4 மார்ச் 2022 அன்று பதவியேற்றார்.[3] நகரத் தந்தைகள் பட்டியல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia