சோழ அரசர் பரம்பரை (9-10 ஆம் நூற்றாண்டுகள்)

தஞ்சையில் சோழர் பேரரசை நிறுவியவன் விசயாலய சோழன். இவன் முதல் முதலாம் இராசராசன் வரையிலுள்ள சோழ அரசர் பரம்பரையைக் காட்டும் அட்டவணை [1]

அட்டவணை

ஆண்ட அரசர் வரிசை பரம்பரை விருது அரசன் ஆண்டு குறிப்பு
1 பரகேசரி விசயாலய சோழன் 845-881 விசயாலயன் மகன் ஆதித்த சோழன்
2 இராசகேசரி ஆதித்த சோழன் 871-907 ஆதித்தனுக்குப் பராந்தகன், கன்னர தேவன் என்று 2 மகன். கன்னர தேவன் முடி சூடவில்லை
3 பரகேசரி பராந்தக சோழன் 907-953 பராந்தகனுக்கு இராசாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன் என்று 3 மகன்கள். இவர்களில் இராசாதித்தன் முடி சூடவில்லை
4 இராசகேசரி கண்டராதித்தன் 950-957 கண்டராதித்தன் மகன் உத்தம சோழன்
5 பரகேசரி அரிஞ்சயன் 957 அரிஞ்சயன் மகன் சுந்தர சோழன்
6 இராசகேசரி இரண்டாம் பராந்தகன் என்னும் சுந்தர சோழன் 957-970 சுந்தர சோழனுக்கு ஆதித்த கரிகாலன், முதலாம் இராசராசன் என்னும் இரண்டு மகன்கள் மற்றும் (முதலாம்) குந்தவை என்று என்று ஒரு மகள்.
7 பரகேசரி உத்தம சோழன் 970-985 உத்தம சோழன் வாரிசு ஆட்சிக்கு வரவில்லை
8 இராசகேசரி முதலாம் இராசராசன் 985-1014 இவனுக்கு மகன் கங்கைகொண்டான் மற்றும் மகள் இரண்டாம் குந்தவை
9 பரகேசரி முதலாம் இராசேந்திரன் (கங்கை கொண்ட சோழன்) 1012-1114

மேற்கோள்

  1. மு. அருணாசலம் , இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, தி பார்க்கர் நிறுவனம் வெளியீடு, 1972, பக்கம் 451
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya