ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம்
ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம் , (George Bush Intercontinental Airport, (ஐஏடிஏ: IAH, ஐசிஏஓ: KIAH, எப்ஏஏ LID: IAH))[2] ஐக்கிய அமெரிக்க நாட்டின் நான்காவது மக்கள்தொகை மிக்க நகரமான ஹியூஸ்டனுக்கும் ஐந்தாவது பெரிய பெருநகரப் பகுதியான ஹியூஸ்டன்-த வுட்லாந்து-சுகர்லாந்துக்கும் சேவை புரிகின்ற வானூர்தி நிலையம் ஆகும். ஹியூஸ்டன் மையப்பகுதியிலிருந்து சுமார் 23 மைல்கள் (37 km) வடக்கே[2] அமைந்துள்ள ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையத்திலிருந்து உள்ளூர் சேரிடங்களுக்கும் பன்னாட்டு சேரிடங்களுக்கும் வானூர்திகள் இயக்கப்படுகின்றன. இந்த வானூர்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவராக இருந்த ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[3] ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையத்தை 2011இல் 40,187,442 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்;[1] வட அமெரிக்காவில் பத்தாவது பயணிகள் போக்குவரத்து மிகுந்த நிலையமாக உள்ளன. காட்சிக்கூடம்
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia