ஜெஹோவா![]() ஜெஹோவா /dʒ[invalid input: 'ɨ']ˈhoʊvə/ (அல்லது) யாவே என்பது கடவுளைக் குறிக்க எபிரேய விவிலியத்தில் பயன்படுத்தப்படுகின்ற சொல் ஆகும். ஆயினும் அதை எவ்வாறு ஒலிப்பது என்பது குறித்து சர்ச்சை நிலவுகிறது. ஜெஹோவா என்னும் பெயர்வடிவம் எபிரேய மூலச் சொல்லான יהוה (YHWH) என்னும் "நாலெழுத்து" வடிவப் பெயரின் (Tetragrammaton) திபேரிய ஒலிப்பின் (יְהֹוָה) இலத்தீன் உருமாற்றுச் சொல் ஆகும்.[1][2] எபிரேய விவிலியத்தில் கடவுளைக் குறிக்கப் பயன்படும் ஜெஹோவா (யாவே - יְהֹוָה) என்னும் சொல்லானது, மரபுவழி வருகின்ற மசோரெத்திய பாடத்தில் (Masoretic Text) 6,518 முறை வருகின்றது. மேலதிகமாக ஜெஹோவி (Jehovih) (יֱהֹוִה) என்னும் வடிவத்தில் 305 தடவை வருகிறது.[3] ஜெஹோவா என்னும் ஒலிவடிவம் கொண்ட பெயரைப் பயன்படுத்தும் மிகப் பழமையான இலத்தீன் விவிலிய பாடம் 13ஆம் நூற்றாண்டைச் சாரும்.[4] இப்பெயர் பற்றி அறிஞர் தரும் விளக்கம்பெரும்பாலான விவிலிய அறிஞர் கருத்துப்படி, எபிரேய விவிலியத்தில் கடவுளைக் குறிக்கும் சொல்லின் ஒரு கலப்பு வடிவமே ஜெஹோவா என்பதாகும். இச்சொல் வடிவம் கி.பி. சுமார் 1100இல் எழுந்ததாக அவர்கள் கூறுகின்றார்கள். பண்டைய எபிரேய மொழியில் மெய்யெழுத்துக்கள் மட்டுமே இருந்தன. மெய்யெழுத்துக்களைக் கூட்டி ஒலிக்கும்போது ஆங்காங்கே தேவையான உயிரெழுத்துக்களைச் சேர்த்து ஒலிப்பார்கள். அந்த வழக்கப்படி, கடவுளைக் குறிக்க எழுதப்பட்ட சொல் இலத்தீன் எழுத்து வடிவில் JHVH என்று குறிக்கப்பட்டது. கடவுளுக்குச் செலுத்த வேண்டிய வணக்கத்தை முன்னிட்டு, கடவுளுடைய பெயரை எபிரேய மக்கள் ஒலிக்க மாட்டார்கள். JHVH என்று எழுதப்பட்ட சொல்லை ஒலிப்பதற்கு, Adonai என்னும் சொல்லில் உள்ள உயிரெழுத்துகளை எடுத்து அவற்றை JHVH என்னும் சொல்லோடு பொருத்தி ஒலித்தார்கள். அதுவே ஜெஹோவா என்று ஒலிக்கப்படலாயிற்று. ஒருசில அறிஞர் கருத்துப்படி ஜெஹோவா என்னும் ஒலிப்பு முறை கி.பி. 5ஆம் நூற்றாண்டிலேயே தோன்றியது. ஜெஹோவா/யெஹோவா என்னும் வடிவமும் யாவே என்னும் வடிவமும் அக்காலத்திலிருந்தே உள்ளன.[5][6] யெஹோவா என்னும் ஒலிப்புமுறை இருந்தாலும் அந்த ஒலிப்பு கி.மு. 3-2 நூற்றாண்டுகளில் வழக்கொழிந்தது. கடவுளுக்குச் செலுத்த வேண்டிய வணக்கத்தையும் மரியாதையையும் முன்னிட்டு, மக்கள் கடவுளின் "நாலெழுத்து" பெயரை ஒலிக்க தயங்கினார்கள். அதற்குப் பதிலாக "ஆண்டவர்" என்னும் பெயர் கொண்ட "Adonai" என்னும் எபிரேயச் சொல்லை ஒலித்தார்கள். எபிரேய மொழியில் கடவுளின் பெயர்![]() எபிரேய அரிச்சுவடியில் 22 மெய்யெழுத்துக்கள் மட்டுமே இருந்தன. சுவடியில் எபிரேயத்தில் எழுதியபோது உயிரெழுத்துகளை எழுதவில்லை. ஆனால் உயிரெழுத்துகளின் துணையின்றி மெய்யெழுத்துகளை மட்டுமே ஒலித்தல் இயலாது. எபிரேய மொழியில் கடவுளின் பெயரை மெய்யெழுத்துகளால் மட்டுமே எழுதினர். அது நான்கு எழுத்துகளால் ஆனதால் "நாலெழுத்து" என்றும் பின்னர் அழைக்கப்பட்டது (கிரேக்கத்தில் tetragrammaton). அந்த நான்கு மெய்யெழுத்துகளால் ஆன சொல் JHVH (அல்லது YHWH) என்பதாம். இந்த நாலெழுத்தை எவ்வாறு ஒலிப்பது என்பது பிரச்சினை. அதை ஜஹாவா,ஜுஹோவாஹா, ஜிஹிவா என்று வெவ்வேறு விதங்களில் ஒலிக்க முடியும். எது சரியான ஒலிப்பு என்ற பிரச்சனை தொடர்ந்தது. கடவுளின் பெயரை ஒலிக்கும் முறை தந்தையிடமிருந்து மகனுக்கு என்று தலைமுறை தலைமுறையாய் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு காலகட்டத்தில் கடவுளின் பெயர் மட்டில் மக்கள் கொண்ட வணக்கம் மற்றும் மரியாதையின் அடிப்படையில் அப்பெயரை ஒலிப்பது முறையல்ல என்று அவர்கள் நினைத்தனர். ஆண்டுக்கு ஒருமுறை எருசலேம் கோவில் வழிபாட்டில் மட்டுமே கடவுளின் பெயர் ஒலிக்கப்பட்டது. அதே நேரத்தில் விவிலியத்தை வாசித்த போதும் அதை அறிக்கையிட்ட போதும் மக்கள் கடவுளின் பெயரை ஒலிக்க வேண்டிய தேவை எழுந்தது. பழைய ஏற்பாட்டு நூல்களில் கடவுளின் பெயர் சுமார் 6800 தடவை வருவதால் அப்பெயரை ஒலிப்பதைத் தவிர்க்க முடியாது. எனவே ஒரு தீர்வு காணப்பட்டது. அதாவது கடவுளைக் குறிக்க "ஆண்டவர்" (Lord; Master) "தலைவர்" என்று பொருள்படுகின்ற "Adonai" என்னும் சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர். சில வேளைகளில் அதே பொருளுடைய "எலோகிம்" (Elohim) என்னும் சொல்லைக் கையாண்டனர். கி.பி. 70ஆம் ஆண்டளவில் எருசலேம் கோவில் உரோமைப் படையினரால் அழிவுண்டது. அதன் பின்னர் எருசலேம் கோவிலில் வழிபாடும் நிகழவில்லை, எபிரேயர் கடவுளைக் குறிக்க பயன்படுத்திய JHVH (YHWH) என்னும் சொல்லின் உயிரெழுத்துக்களும் எனவே ஒலிப்பும் மறைந்தது. எபிரேய விவிலியத்தில் கடவுளின் பெயர் JHVH (YHWH) என்று மெய்யெழுத்துத் தொகுப்பாக, "நாலெழுத்தாக" மட்டுமே இருக்கலாயிற்று. உயிரெழுத்துக்கள் சேர்க்கப்படுதல்கி.பி. சுமார் 500ஆம் ஆண்டளவில் எபிரேய அறிஞர்கள் எபிரேய மொழியை எழுதுவதில் ஒரு சீர்திருத்தம் கொணர்ந்தார்கள். எபிரேயச் சொற்களின் ஒலிப்பு சரியாகப் பாதுகாக்கப்படுவதற்கு உயிரெழுத்துக்களையும் இணைத்து எழுத வேண்டும் என்று முடிவுசெய்தார்கள். எனவே எபிரேயத்தில் உயிரெழுத்துக்களைக் குறிக்கின்ற அடையாளங்கள் புகுத்தப்பட்டன. இந்த சீர்திருத்தத்தைச் செய்த அறிஞர்கள் "மசோரெத்தியர்" என்னும் பொதுப்பெயரால் அறியப்படுகின்றனர். அச்சொல் "மரபு பேணுபவர்" என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. இத்தகைய மசோரெத்திய அறிஞர்கள் எபிரேய விவிலியத்தில் உயிரெழுத்துக் குறியீடுகளைச் சேர்த்ததோடு, சில ஒலிப்பு விளக்கங்களையும் ஓரத்தில் எழுதினர். இதற்கு விவிலிய மசோரெத்திய பாடம் என்று பெயர். அவர்கள் கொணர்ந்த எழுத்து மற்றும் ஒலிப்பு சீர்திருத்தம் இரு தூண்கள் மேல் எழுந்தது. அவர்கள் விவிலிய பாடத்தின் வடிவத்தை எந்த விதத்திலும் மாற்றவில்லை; உயிரெழுத்து குறியீடுகளை மட்டுமே சேர்த்து சொற்களை ஒலிப்பதற்கு வழிகாட்டினர். மேலும், அவர்கள் தம் காலத்தில் வழக்கத்திலிருந்த ஒலிப்பு முறைக்கு ஏற்ப அந்த உயிரெழுத்துக் குறியீடுகளைச் சேர்த்தனர். ஆனால் JHVH (YHWH) என்னும் சொல் பண்டை நாள்களில் எவ்வாறு ஒலித்தது என்பதை அவர்கள் துல்லியமாக அறிந்திருக்கவில்லை. மேலும் யூதர்களின் தொழுகைக் கூடங்களில் கி.பி. 500களில், விவிலியத்தில் எங்கெல்லாம் JHVH (YHWH) என்னும் சொல் வந்ததோ அங்கெல்லாம் "Adonai" அல்லது "Elohim" என்னும் சொல்லே உச்சரிக்கப்பட்டது. நிலைமை இவ்வாறு இருந்ததால், மசோரெத்திய அறிஞர்கள் JHVH (YHWH) என்னும் சொல்லை எவ்வாறு ஒலிக்கலாம் என்பதற்கு ஒரு வழிமுறை கண்டார்கள். அவர்கள் கடவுளைக் குறிக்கும் JHVH (YHWH) என்ற சொல்லின் மெய்யெழுத்துக்களை அப்படியே வைத்துவிட்டு, அந்த எழுத்துக்களுக்கு "Adonai" (அல்லது "Elohim")("ஆண்டவர்", "தலைவர்") என்னும் சொல்லிலுள்ள a (e), o, a (i) (அ (எ), ஓ, ஆ (இ)) என்னும் மூன்று உயிரெழுத்துக்களையும் சேர்த்தார்கள். இவ்வாறு உயிரெழுத்துக்களைச் சேர்த்ததால், விவிலிய வாசகர்கள் JHVH (YHWH) என்னும் சொல்லை விவிலியத்தில் கண்டபோது அதை "அதோனாய்" அல்லது "எலோகிம்" என்று ஒலித்தார்கள். அந்த ஒலிப்பிலிருந்து "ஜெஹோவா" என்னும் ஒலிப்பு பிறந்தது. அதாவது, கடவுளைக் குறிக்க எபிரேய விவிலியத்தில் பயன்படுத்தப்பட்ட JHVH (YHWH) என்னும் சொல்லை எவ்வாறு ஒலிக்கலாம் என்று கிறித்தவ இறையியலார் சிந்திக்கலாயினர். ஒருசிலர் தெரியாமலோ வேண்டுமென்றோ "Adonai" ("ஆண்டவர்", "தலைவர்") என்று கடவுளைக் குறிக்க பயன்பட்ட சொல்லிலிருந்து எடுக்கப்பட்டு, JHVH (YHWH) என்னும் பெயரோடு சேர்க்கப்பட்ட உயிரெழுத்துக்களை அப்படியே கூட்டி ஒலிக்கத் தொடங்கினார்கள். எபிரேய மொழியின் புணர்ச்சி விதிகளுக்கு ஏற்ப முதல் உயிரெழுத்தான "அ" "எ" என்று மாறியது. இவ்வாறு எ, ஓ, ஆ என்னும் மூன்று உயிரெழுத்துக்களும் JHVH (YHWH) என்னும் மெய்யெழுத்துத் தொகுதியோடு சேர்ந்து "ஜெஹோவா" என்னும் ஒலிப்பு பிறக்கலாயிற்று. இவ்வாறு ஒரு சொல்லின் மெய்யெழுத்துக்களும் மற்றொரு சொல்லின் உயிரெழுத்துக்களும் இணைந்து ஒரு புதிய சொல் உருவாயிற்று. அதுவே "Jehova" ("ஜெஹோவா"). மொழிபெயர்ப்புகள்விடுதலைப் பயணம் ("Exodus") நூல் 6:3 பகுதி ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டதைக் கீழ்வரும் பட்டியல் காட்டுகிறது. அதில்:
சரியான ஒலிப்பு எது?எபிரேய விவிலியத்தில் கடவுளைக் குறிக்கப் பயன்படும் சொல்லான JHVH (YHWH) என்பதை எவ்வாறு ஒலிப்பது அல்லது மொழிபெயர்ப்பது என்பதில் கருத்து வேறுபாடு தொடர்ந்து நிலவுகிறது.
![]() குறிப்புகள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia