ஜோனாத்தான் ஓஹாயான்

ஜோனாத்தன் லிசு ஓகாயான் (Jonathan Ohayon) ( சனவரி 10, 1972) என்பவர் கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள தொராண்டோவைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவர். இவர் வில்வித்தையில் போட்டியிடுகிறார். கண்ணாடிக் கலைஞரான இவர் எழுத்தாளர் ஜோசப் லிஸ்ஸின் பேரன் ஆவார்.


2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் ஒற்றையர் பிரிவில் வில்வித்தைப் போட்டியில் ஓகாயான் கலந்துகொண்டார். இவர் முதல்நிலைச் சுற்றில் தோல்வியடைந்து, 47வது இடத்தைப் பெற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya