ஜோயிதா மண்டல்ஜோயிதா மண்டல் (Joyita Mondal) என்பவர் இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளத்தைச் சார்ந்த திருநங்கை ஆவார். இவர் இந்திய நாட்டிலேயே நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் திருநங்கை ஆவார். இவர் சமூக சேவகரும் ஆவார்.[1][2][3][4] வாழ்க்கைக் குறிப்புஜோயிதா மண்டல் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரில் பிறந்தவர். பின்னர் இவர் உத்தர தினஜ்பூர் மாவட்டத்தில் இஸ்லாம்பூரில் வாழ்ந்து வந்தார். அங்கு திருநங்கைகளை ஒன்று திரட்டி சங்கம் ஒன்றை உருவாக்கி அவர்களின் முன்னேற்றத்திற்காக சேவையாற்றி வந்தார். அதே நேரத்தில், இவர் அஞ்சல் வழியில் சட்டத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். தனது மாவட்டத்தில் முதல் முதலாக வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்ற ஒரு மூன்றாம் பாலினத்தவர் இவரேயாவார்.[3] தினாஜ்பூர் புதிய விளக்குஇவர் ஒன்று திரட்டிய சங்கத்திற்கு தினாஜ்பூர் புதிய விளக்கு என பெயரிட்டார். சங்கத்தின் மூலம் பல்வேறு சமூக பணிகளைச் செய்தார். பலரிடம் உதவி பெற்று திருநங்கைகளுக்கு பல்வேறு வித உதவிகளைச் செய்து வந்தார்.[5] தொழில் வாழ்க்கை2017 ஆம் ஆண்டு சூலை 8 ஆம் நாள், 29 வயது நிறைந்த மண்டல் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதியான முதல் பெண் திருநங்கை ஆனார். இவர் உத்தர தினஜ்பூர் மாவட்டத்தில் இஸ்லாம்பூரில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் தனது பணியைத் தொடங்கினார். சில வங்கிகளால் கடன் தொகை வசூல் செய்யப்பட்ட வழக்கொன்றை முதல் வழக்காகச் சந்தித்தார்.[2][6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia