2013 டின்வால்டு ஹில் பன்னாட்டு கால்பந்துப் போட்டி (Tynwald Hill International Football Tournament) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் (ஃபீஃபா) அங்கீகரிக்கப்படாத நாடுகள் மாண் தீவில் 2013 சூலை 4 தொடக்கம் சூலை 7 வரை பங்குபற்றிய ஒரு பன்னாட்டுக் கால்பந்துப் போட்டித் தொடராகும்.[1] இப்போட்டித் தொடரில் மாண் தீவு அணிக்காக அந்நாட்டின் சென் ஜோன்சு யுனைட்டட் அணி, மற்றும் இரேத்சியா, அல்டேர்னி ஆகியன பி பிரிவிலும், ஒக்சித்தானியா, சீலாந்து வேள்புலம், தமிழீழ கால்பந்து அணிகள் பிரிவு ஏ இலும் விளையாடின.[2][3][4] இறுதி ஆட்டத்தில் ஒக்சித்தானியா அணி சென் ஜோன்சு யுனைட்டெட் அணியை 2-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை வென்றது. தமிழீழக் காற்பந்து அணிஇரேத்சியா அணியை 5-0 என்ற கணக்கில் வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.