டிரினிட்டி (Trinity) என்பது உலகில் முதன்முதலில் நிகழ்ந்த அணுகுண்டு வெடிப்பு நிகழ்வின் குறிப்பெயர். இந்த அணுகுண்டு சோதனை ஐக்கிய அமெரிக்க இராணுவத்தால் சூலை 16, 1945[3][4][5][6][7]நியூ மெக்சிக்கொவின் சொகோறோவிலிருந்து தென் மேற்காக 35 மைல்கள் (56 கி.மீ) தூரத்திலுள்ள ஜோர்நாடா டெல்மியோட்டொ பாலைவனத்தில் மேற்கொள்ளப்பட்டது. (இப்பகுதி இப்போது வைட் சான்ட் ஏவுகணை வீச்சு எனப்படுகின்றது.)[8][9] இத்திகதியே அணுவாயுத உற்பத்திக்கான தொடக்கமாகக் கருதப்டுகின்றது.
டிரினிட்டி புளுடோனியத்தால் ஆன அணுவெடிப்பை ஏற்படுத்தும் கருவி ஆகும். இது த கட்ஜெட் (The Gadget) என்ற செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.[10] இதே நுட்பத்தைப் பயன்படுத்தியே ஆகத்து 9, 1945 இல் சப்பானியநாகசாகி நகரத்தில் வெடிக்கவைக்கப்பட்ட ஃபாட் மேன் உருவாக்கப்பட்டது. டிரினிடி ஏறக்குறைய 20 கிலோடன் நைத்திரொ டொலுயூரின் (trinitrotoluene TNT)க்கு சமமான வெடிசக்தியைக் கொண்டது.
↑"Trinity Site". National Historic Landmarks. National Park Service. Archived from the original on 2008-02-15. Retrieved 2008-01-28.
↑Ferenc Morton Szasz, The Day The Sun Rose Twice: The Story of the Trinity Site Nuclear Explosion July 16, 1945 (University of New Mexico Press, 1984). பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-8263-0768-2