டெட்ராபென்சைல்சிர்க்கோனியம் (Tetrabenzylzirconium) என்பது Zr(CH2C6H5)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச்சேர்மமாகும். கரிம சிர்க்கோனியம் சேர்மமான இது எதிர்காந்தப் பண்பை வெளிப்படுத்துகிறது. கட்டமைப்பில் Zr(IV) நான்கு பென்சைல் ஈந்தணைவிகளுடன் பிணைந்திருக்கிறது. டெட்ராபென்சைல்சிர்க்கோனியம் ஆரஞ்சு நிறத்துடன் ஒளியுணர்திறன் கொண்டு திண்மமாக காணப்படுகிறது. ஐதரோகார்பன் கரைப்பான்களில் டெட்ராபென்சைல்சிர்க்கோனியம் கரையும். ஒலிபீன்களை பலபடியாக்க இது ஒரு வினையூக்கியாக பயன்படுத்தப்படும் முன்னோடிச் சேர்மமாகும்.[2][3]
கட்டமைப்பு
எக்சுகதிர் படிகவியல் ஆய்வின்படி டெட்ராபென்சைல்சிர்க்கோனியத்தின் கட்டமைப்பு- தெளிவுக்காக ஐதரசன் அணுக்கள் நீக்கப்பட்டுள்ளன.
பென்சைல் ஈந்தணைவிகள் மிகவும் நெகிழ்வானவை என்பதை எக்சுகதிர் படிகவியல் ஆய்வு நிரூபிக்கிறது:ஒரு பல் உருவி நான்கு η2-ஈந்தணைவிகளையும், மற்றொன்று இரண்டு η1- ஈந்தணைவிகளையும், மற்றும் இரண்டு η2-பென்சைல் ஈந்தணைவிகளையும் கொண்டுள்ளன.[1]
டெட்ராபென்சைல்சிர்க்கோனியம் ஐதரசன் குளோரைடுடன் சேர்க்கப்படும்போது எளிதாக புரோட்டானாற் பகுப்பு அடைகிறது.
Zr(CH2C6H5)4 + HCl → Zr(CH2C6H5)3Cl + CH3C6H5
மேற்கோள்கள்
↑ 1.01.1Rong, Yi; Al-Harbi, Ahmed; Parkin, Gerard (2012). "Highly Variable Zr–CH2–Ph Bond Angles in Tetrabenzylzirconium: Analysis of Benzyl Ligand Coordination Modes". Organometallics31 (23): 8208–8217. doi:10.1021/om300820b.
↑Tshuva, Edit Y.; Goldberg, Israel; Kol, Moshe (2000). "Isospecific Living Polymerization of 1-Hexene by a Readily Available Nonmetallocene C2-Symmetrical Zirconium Catalyst". Journal of the American Chemical Society122 (43): 10706–10707. doi:10.1021/ja001219g.
↑Zucchini, U.; Albizzati, E.; Giannini, U. (1971). "Synthesis and Properties of Some Titanium and Zirconium Benzyl Derivatives". Journal of Organometallic Chemistry26 (3): 357–372. doi:10.1016/S0022-328X(00)82618-2.