டெட்ராமெத்திலமோனியம் பெர்குளோரேட்டு
டெட்ராமெத்திலமோனியம் பெர்குளோரேட்டு (Tetramethylammonium perchlorate) என்பது [N(CH3)4]+ClO4− என்ற சுருக்கப்பட்ட வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பெர்குளோரேட்டு உப்பாகும். தயாரிப்புகுளிர்ச்சியான நீர்த்த பெர்குளோரிக் அமிலத்துடன் குளிர்ந்த டெட்ராமெத்திலமோனியம் ஐதராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து டெட்ராமெத்திலமோனியம் பெர்குளோரேட்டு தயாரிக்கப்படுகிறது. இவ்வினையின் இறுதியில் வெண்மை நிற வீழ்படிவாக டெட்ராமெத்திலமோனியம் பெர்குளோரேட்டு உருவாகிறது.[2] பயன்கள்வண்ணப்படிவுப் பிரிகையிலும், கரிமத்தொகுப்பு வினைகளில் ஓர் இடைநிலையாகவும், மின்வேதியியலில் ஒரு துணை மின்பகுளியாகவும் டெட்ராமெத்திலமோனியம் பெர்குளோரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[3] பனிப்போரின் போது டிரைமெத்திலாமோனியம் பெர்குளோரேட்டுடன் சேர்த்து இதை கலப்பு உந்துசக்திகளில் ஓர் அங்கமாகப் பயன்படுத்த ஆராயப்பட்டது, ஆனால் இம்முயற்சி அதிக வெற்றி பெறவில்லை. மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
|
Portal di Ensiklopedia Dunia