டெட்ராமெத்தில்வெள்ளீயம்
டெட்ராமெத்தில்வெள்ளீயம் (Tetramethyltin) என்பது (CH3)4Sn என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் எளிமையான கரிம உலோகச் சேர்மமான இது நீர்மநிலையில் காணப்படுகிறது. அமில குளோரைடுகளை மெத்தில் கீட்டோன்களாகவும், அரைல் ஆலைடுகளை அரைல் மெத்தில் கீட்டோன்களாகவும் மாற்றும் செயல்முறையில் இச்சேற்மம் பயனுள்ளதாக இருக்கும். எளிதில் ஆவியாகும் என்பதாலும் நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதாலும் இதை ஆய்வகத்தில் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். தயாரிப்புவெள்ளீயம் டெட்ராகுளோரைடுடன் கிரிக்னார்டு வினையாக்கியான மெத்தில்மக்னீசியம் அயோடைடைச் சேர்த்து வினை புரியச் செய்வதால் டெட்ராமெத்தில்வெள்ளீயம் உருவாகிறது.[2] குளோரின் வாயுவுடன் வெள்ளீயம் உலோகத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து வெள்ளீயம் டெட்ராகுளோரைடு தயாரித்துக் கொள்ளப்படுகிறது.[3]
கட்டமைப்புடெட்ராமெதில்வெள்ளீயத்தில் நான்கு மெத்தில் குழுக்களால் சூழப்பட்ட உலோகம் ஒரு நான்முகி அமைப்பில் நியோபெண்டேன் கட்டமைப்பை ஒத்துள்ளது. பயன்பாடுகள்மெத்தில்வெள்ளீய சேர்மங்களின் முன்னோடிடெட்ராமெத்தில்வெள்ளீயம் சேர்மம் மும்மெத்தில்வெள்ளீயக் குளோரைடு மற்றும் தொடர்புடைய மெத்தில்வெள்ளீயம் ஆலைடு சேர்மங்கள் தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாகும். இவை பிற கரிமவெள்ளீயச் சேர்மங்கள் தயாரிக்க உதவும் முன்னோடிகளாக உள்ளன. இந்த மெத்தில்வெள்ளீயக் குளோரைடுகள் கோசெசுகோவ் மறுபகிர்வு வினை மூலம் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு, (CH3)4Sn மற்றும் SnCl4 ஆகியவை 100 °செல்சியசு மற்றும் 200 °செல்சியசு வெப்பநிலைகளுக்கு இடையேயான வெப்பநிலையில் வினைபுரிந்து (CH3)3SnCl சேர்மத்தை ஒரு விளைபொருளாகக் கொடுக்கின்றன.
டெட்ராமெத்தில்வெள்ளீயத்தைப் பயன்படுத்தி மும்மெத்தில்வெள்ளீயக் குளோரைடு தயாரிப்பதற்கான இரண்டாவது வழி பாதரச(II) குளோரைடை டெட்ராமெத்தில்வெள்ளீயத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதாகும்.[2]
பல்வேறு வகையான மெத்தில்வெள்ளீய சேர்மங்கள் பாலிவினைல் குளோரைடு நிலைப்படுத்திகளுக்கு முன்னோடிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன[3] மேற்பரப்பு செயல்பாடுடெட்ராமெதில்வெள்ளீயம் வாயு நிலையில் சுமார் 277 ° செல்சியசு வெப்பநிலையில் சிதைகிறது; (CH3)4Sn ஆவி சிலிக்காவுடன் வினைபுரிந்து (CH3)3Sn-ஒட்டுதல் திடப்பொருளைக் கொடுக்கிறது.
இந்த வினை மற்ற அல்கைல் பதிலீடுகளாலும் கூட சாத்தியமாகும். இதேபோன்ற ஒரு செயல்பாட்டில், டெட்ராமெதில்வெள்ளீயம் சில சியோலைட்டுகளை −90 °செல்சியசு வெப்பநிலை வரையிலான குறைந்த வெப்பநிலையில் செயல்பட பயன்படுத்தப்படுகிறது.[4] கரிமத்தொகுப்பு வினைகளில் =கரிமத் தொகுப்பு வினைகளில் டெட்ராமெதில்வெள்ளீயம் அமில குளோரைடுகளுடன் பல்லேடியம்-வினையூக்க பிணைப்பு வினைகளுக்கு உட்பட்டு மெத்தில் கீட்டோன்களை அளிக்கிறது.:[5]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia