டெட்ராவினைல்வெள்ளீயம்
டெட்ராவினைல்வெள்ளீயம் (Tetravinyltin) என்பது C8H12Sn என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமவெள்ளீயம் சேர்மமான இதை டெட்ராவினைல்சிடானேன் என்றும் அழைக்கலாம். பயன்கள்வெப்பப்படுத்தினால் டெட்ராவினைல்வெள்ளீயம் மற்றும் வெள்ளீயம் டெட்ராகுளோரைடு ஆகியவற்றின் கலவையானது விகிதாச்சாரமின்றி இருவினைல்வெள்ளீயம் இருகுளோரைடு, வினைல்வெள்ளீயம் முக்குளோரைடு மற்றும் டிரைவினைல்வெள்ளீயம் குளோரைடு ஆகியவற்றை அதிக அளவில் உருவாக்குகிறது.[1] இவ்வினை பற்றிய ஓர் ஆய்வை அமெரிக்க னேதியியல் சங்கம் இதழில் காணலாம்.[2] டெட்ராவினைல்வெள்ளீயத்தை சிகிச்சை அல்லது நோயறிதல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாது. ஆனால் இது ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.[3] மென் படல படிவுக்காகவும் இதை பயன்படுத்தடலாம்.[4] தீங்குகள்ஐரோப்பிய வேதியியல் முகமையின் கூற்றுப்படி, டெட்ராவினைல்வெள்ளீயம் திரவ மற்றும் வாயு வடிவங்களில் எரியக்கூடியதாகும். தோலுடன் தொடர்பு கொள்ளும்போதும், உள்ளிழுக்கும்போதும், விழுங்கும்போதும் நச்சுத்தன்மையுடையதாக செயல்படுகிறது.[5] எனவே, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி இதை கையாள வேண்டும். பயன்படுத்தும்போது சரியான எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும். மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia