த ப்ளஸட் டேமோசல்
த ப்ளஸட் டேமோசல் (The Blessed Damozel) என்பது டேன்டி கெய்பிரியல் ரோசட்டி என்பவரால் எழுதப்பட்ட சிறந்த கவிதையாகும். இது 1850 ஆம் ஆண்டில் "த ஜெர்மி" பத்திரிகையில் வெளியிடப்பட்டது. ரோசெட்டி இரண்டு முறை கவிதையை திருத்தி, 1856, 1870 மற்றும் 1873 ஆம் ஆண்டுகளில் அதை மறுபடியும் வெளியிட்டார்.[1] அவருடைய சில சிறந்த ஓவியங்களுக்கு இதே பெயரைப் பயன்படுத்தினார். கவிதையின் முதல் நான்கு சரணங்களும் ஓவியத்தின் வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. கவிதைஇக்கவிதை எட்கர் ஆலன் போபோவின் " தி ரேவன் " [2]கவிதையால் ஓரளவு ஈர்க்கப்பட்டது. ஒரு காதலன் தனது அன்புக்குரியவரின் மரணத்தால் பூமியில் துக்கப்படுவதை சித்தரிக்கிறது. ரோசெட்டி நிலைமையை தலைகீழாக பிரதிநிதித்துவப்படுத்தினார். சொர்க்கத்தில் இருந்து தன் காதலனைக் கவனிப்பதையும், பரலோகத்தில் அவர்கள் மீண்டும் இணைவதற்கான அவளது நிறைவேறாத ஏக்கத்தையும் இந்தக் கவிதை விவரிக்கிறது. கவிதையின் முதல் நான்கு சரணங்கள் ஓவியத்தின் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளன சான்றுகள்
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia