தண்டீசுவரர் கோவில்
தண்டீசுவரர் கோயில் (Shri Dandeeswarar Temple) என்பது சென்னை புறநகர்ப் பகுதியான வேளச்சேரியில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இந்தக் கோயிலில் பல்லவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு சோழர் ஆட்சிக்காலத்தில் பழுது பராமரிக்கும் பணியும் புதுப்பித்தல் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் ஒரு முதன்மைக் கோபுர வளாகமும் தெப்பக்குளமும் உள்ளது. இந்தக் கோயில் வேளச்சேரி முதன்மைச் சாலையில் அமைந்துள்ள குரு நானக் கல்லூரியிலிருந்து கிழக்கு நோக்கிய சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துளள்து. இந்தக் கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. புராண வரலாறுஇத்தலத்து ஈசனுக்கு தண்டீசுவரர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு புராண நிகழ்வு காரணமாக கூறப்படுகிறது. துவாரகயுகத்தில் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் வந்தான். உடனே மார்க்கண்டேயன் திருக்கடையூர் தலத்துக்குள் புகுந்து லிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார். என்றாலும் எமன் பாசக்கயிறை வீசினான். அந்த கயிறு லிங்கம் மீது பட்டது. உடனே ஈசன் வெளிப்பட்டு எமனை எட்டி உதைத்தார். அதோடு எமன் பதவியையும் அவன் வைத்திருந்த தண்டத்தையும் ஈசன் பறித்தார். இழந்த பதவியைப் பெற எமன் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்துக்கு வந்து எம தீர்த்தம் உருவாக்கி இலிங்கத்தை உருவாக்கி வழிபட்டான். அவனுக்கு ஈசன் காட்சி கொடுத்து வாழ்த்தினார். பிறகு அவனது தண்டத்தையும் திருப்பிக் கொடுத்தார். அன்று முதல் எமன் கேட்டுக் கொண்டபடி இத்தலத்து ஈசன் தண்டீசுவரர் ஆனார். இத்தலத்தில் கருணாம்பிகை என்ற பெயரில் அம்மன் எழுந்தருளியுள்ளார். இந்த இடத்தோடு தொடர்புடைய மற்றொரு புராணக்கதையானது இரணியாட்சனால் கவர்ந்து செல்லப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்ட நான்கு வேதங்களும் விஷ்ணுவால் வராக அவதாரம் எடுக்கப்பட்டு காப்பாற்றி வரப்பட்டதற்குப் பின் இந்த ஆலயத்தில் உள்ள கடவுளை வழிபட்டு தங்களது பழைய வலிமையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆகவே, தங்களது பழைய வலிமையை இழந்தவர்கள் தங்களது பலத்தை மீண்டும் பெற இந்தக் கோயில் மிகவும் பொருத்தமான இடம் ஆகும். வேத சிரேணி என்பதே மறுவி பின்னாளில் வேளச்சேரி என்று மாறியதாகவும் கூறப்படுகிறது. [1] கோயில்இந்தக் கோயிலானது ஐந்தடுக்குகளுடன் விமானம் அமைக்கப்பட்டதாய் உள்ளது. மேலும் பிள்ளையார், முருகன் மற்றும் சாஸ்தா ஆகியோருக்குத் தனித்தனி சன்னதிகள் உள்ளன. கூடவே சூரியன் இதர தேவதைகள் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகளும் உள்ளனர். கோவிலானது மோசமான பராமரிப்பின் காரணமாக சிதைந்த தூண்களுடனும் சிதைவடைந்த எச்ச சிற்பங்களுடனும் காணப்படுகிறது. தூண்களில் தமிழ் மற்றும் தேவநாகரி அரிமானங்கள் காணப்படுகின்றன. சமீப காலங்களில் வேளச்சேரி மிகச்சுறுசுறுப்பான புறநகர்ப் பகுதியாக மாறிய பிறகு புரவலர்கள் அதிகமாகி மேம்பட்ட நிலையில் காணப்படுகிறது. முந்தைய காலங்களில் தமிழ் புத்தாண்டு நாளன்று சூரிய ஒளியானது லிங்கத்தின் மீது படுமாறு விழும் எனவும் கூறப்படுகிறது. தற்போது மிக உயரமான கட்டிடங்கள் எழும்பிய நிலையில் அவ்வாறான நிகழ்வினைக் காண வாய்ப்பதில்லை. ஆலயத்தின் பூசைகள் நாள்தோறும் காலை 6.30 மணியிலிருந்து தொடங்கி முற்பகல் 11.30 மணி வரை தொடர்கிறது. பிற்பகலில் 4 மணிக்குத் திறக்கப்பட்டு 8.30 மணி வரை பூசைகள் நடைபெறும்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia