தமிழர் வாழ்வோட்ட சடங்குகள்

ஒரு மனிதனின் வாழ்வில் நிகழும் முக்கிய நிகழ்வுகளைக் குறித்து ஒவ்வொரு சமூகமும் அது தொடர்பான சடங்குகளைக் கொண்டிருக்கிறது. இத்தகைய சடங்குகள் சமய சார்புடையதாகவே உள்ளது. இருப்பினும் ஒரு சில நிகழ்வுகள் இனங்களை பொறுத்தும் அமைகின்றன. எடுத்துக்காட்டாக உணர்ச்சி வெளிப்படுத்தப்படும் முறை, பாடப்படும் பாடல்கள், கொண்டாட்ட முறைகள் ஆகியன. பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு ஆகிய நிகழ்வுகளில் தமிழர் மத்தியில் பொதுவாகவும், சமயம் சார்ந்தும் காணப்படும் சில சடங்குகளை தமிழர் வாழ்வோட்ட சடங்குகள் எனலாம்.

வாழ்க்கை வட்டச் சடங்குகள்

வாழ்க்கை வட்டச் சடங்கள் என்பது பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு என்ற அடிப்படை வாழ்வியல் நிகழ்வுகளை கொண்டு அமைக்கப்பட்டவை ஆகும். நாட்டார் சடங்குகளை ஆய்வு செய்த முத்தையா சடங்குகள் என்பது வாழ்வில் அடுத்தடுத்து நிகழும் ஒவ்வொரு நிலை மாற்றமும் ஒரு சடங்கு நிகழ்வோடு பண்பாட்டு வயப்படுத்துவது என்று குறிப்பிடுகிறார்.

பிறப்புச் சடங்கு

  • சேனைத் தொடுதல்
  • தொட்டிலிடுதல்
  • பெயர் வைத்தல்
  • மொட்டை அடித்தல்
  • காது குத்துதல்
  • சோறு ஊட்டுதல்

பூப்புச் சடங்கு

  • நீராட்டுதல்
  • குடிசை கட்டுதல்
  • குடிசைக்குள் விடுதல்
  • தலைசுற்றுதல்

திருமணச் சடங்கு

  • பரிசம் போடுதல்
  • முகூர்த்தகால் நடுதல்
  • பட்டம் கட்டுதல்
  • தாலி கட்டுதல்
  • மெட்டி அணிவித்தல்
  • களியாக்கிப் போடுதல்
  • வளைகாப்பு சடங்கு

இறப்புச் சடங்கு

  • வாக்கட்டு, கால்கட்டு அணிவித்தல்
  • நீர் எடுத்து வருதல்
  • கோடி போடுதல்
  • சீதேவி வாங்குதல்
  • பாடை மாற்றுதல்
  • வாய்க்கரிசி போடுதல்
  • கொள்ளி வைத்தல்
  • கருமாதி செய்தல்
  • அடைப்பு

வளமைச் சடங்குகள்

  • மழைச் சடங்கு
  • முளைப்பாரி சடங்கு

மந்திரச் சடங்குகள்

நம்பிக்கைச் சடங்குகள்

  • நம்பிக்கை
  • திட நம்பிக்கை
  • மூட நம்பிக்கை
  • நாள் பற்றிய நம்பிக்கை
  • சகுணம் பற்றிய நம்பிக்கை
  • கண்ணேறு பற்றிய நம்பிக்கை
  • சோதிடம் பற்றிய நம்பிக்கை

இவற்றையும் பாக்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya