தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நியமன வழக்கு 2015தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நியமன வழக்கு, 2015 என்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2000 - 2001ஆம் ஆண்டில் தொகுதி 1-க்கான துணை ஆட்சியர், காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர், மாவட்டப் பத்திரப் பதிவாளர் உள்ளிட்ட தொகுதி 1 அலுவலர்களைத் தேர்ந்தெடுக்க நடத்திய போட்டித் தேர்வில், தேர்ச்சி பெற்ற 91 பேர்களுக்கு, தமிழக அரசு பதவி நியமனம் வழங்கியது குறித்த வழக்காகும். வரலாறுதொகுதி 1-க்கான காலிப் பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2000–2001–ம் ஆண்டில் நடத்திய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 91 பேர்களுக்கு துணை ஆட்சியர் போன்ற அரசு உயர்பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2005ஆம் ஆண்டில் பணி நியமனம் வழங்கப்பட்டது. அந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி நடராஜன் என்பவர் 2005–ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 91 பேரில் 83 பேர்கள் தேர்ச்சி பெற்றது செல்லாது என்றும், உடனடியாக அவர்களை அரசுப் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.[1] இந்தத் தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இடைக்கால உத்தரவுஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் மாற்றம் கோரி பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பாக புதிய மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய 83 அதிகாரிகளும் தொடர்ந்து தமிழக அரசுப் பதவியில் நீடிக்கலாம் என்று இடைக்கால உத்தரவை வழங்கியது. இந்திய ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஆய்வறிக்கைஇந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தேர்ந்தேடுக்கப்பட்ட 91 பேரில், 15 பேர் வேறு பணிகளுக்கு சென்றுவிட்டனர், மூன்று பேர் மரணமடைந்து விட்டனர், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மறு மதிப்பீட்டில் எட்டு பேர் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தனர், எஞ்சியவர்கள் 65 பேர் மட்டுமே இவ்வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகள். இந்த வழக்கு தொடர்பான 65 பேரின் விடைத்தாள்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி[2]ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வழக்கு குறித்த 65 பேரின் விடைத்தாள்களை ஆய்வு செய்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 6 மே 2015 அன்று இந்த அறிக்கையை அனைத்து தரப்பினருக்கும் வழங்கவும், அதன் மீது ஏதேனும் மறுப்பு இருப்பின் அதனைக் குறித்து நான்கு வாரங்களுக்குள் எழுத்து மூலமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்திரவிட்டது. உச்ச நீதிமன்ற அமர்வு விசாரனைஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தாக்கல் செய்த அறிக்கையை விசாரிக்க, நீதியரசர்கள் அனில் ஆர். தவே மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தீர்ப்புஇந்த வழக்கில் 1 சூலை 2014 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 83 அதிகாரிகளின் தேர்வு முறையற்றது என்று தீர்ப்பு வழங்கியது[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia