தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன் சமகாலத் தமிழ்க்கவிதைச் சூழலில் குறிப்பிடத்தக்க கவிஞர்.மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதை வாயிலாக நவீன கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவருடைய நவீன கவிதைகள் அடங்கிய கவிதைத் தொகுதி,’அலமாரியில் ஓர் இராஜ கிரீடம்’, 2000 புத்தாயிரத்தாண்டு நள்ளிரவில் வெளியிட்டார். அந்நூல் இலக்கியப் பரப்பில் முக்கிய கவனம் பெற்றது.

’அதற்குத்தக’, என்னும் இவரின் அடுத்த கவிதைத் தொகுப்பு 2004 ல் வெளிவந்தது. அந்நூல் வெளி வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே , தமிழின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகள், அதன் மீது எழுதிய கட்டுரைகள் அடங்கிய, ”நீர் நிரம்பும் காலம்”’, என்னும் கட்டுரைத் தொகுப்பு வெளிவந்தது.

தன் கவிதைகள் மீது சக படைப்பாளிகள் எத்தகைய கருத்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் போலவே சக படைப்பாளிகளின் படைப்புகள் மீதான இவரின் விமர்சனக் கட்டுரைகளைத் தொகுத்து, ’சொல் விளங்கும் திசைகள்’, என்னும் நூலினை 2006 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இதற்கிடையே தமிழ் மீது கொண்ட ஈடுபாட்டினால், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், முதுகலை (தமிழ்) முதுகலை     ( மொழியியல்) ஆகிய பட்டங்களை பெற்றார்.

’புறவழிச்சாலை’, என்னும் இவரது கவிதை நூல் 2009 ஆம் ஆண்டு வெளியானது. அந்நூல் இரண்டு விருதுகளைப் பெற்றது. , சேலத்தில் இருந்து இயங்கும் ”‘எழுத்துக் களம்”’, இலக்கிய விருதினையும் கோயம்புத்தூரிலிருந்து,  ”நொய்யல்’, இலக்கிய விருதையும் பெற்றது.

.  முதுகலை (தமிழ்) மற்றும் முதுகலை (மொழியியல்) முடித்துவிட்டு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், ’’நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக் கூறுகள்: காலமும் வெளியும்’’, என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

இவரது அண்மைக்காலக் கவிதைகளின் தொகுப்பான ,’’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’’, 2017 ஆம் ஆண்டு வெளியானது. அந்நூல், ”கவிதை உறவு” மற்றும் ’’நெருஞ்சி’’, இலக்கிய விருதுகளைப் பெற்றது.

சமகாலப்படைப்பாளிகளின் கவிதைகள் குறித்து, ‘கவி நுகர் பொழுது’, என்னும் தொடரை, திண்ணை இணைய தளத்தில் எழுதி வந்தார் . அக்கட்டுரைகள் நுலாகவும் வெளிவந்துள்ளது.

மாறுப்பாலினத்தவர் நலன்கோரி தேசியசட்ட ஆணைக்குழு தாக்கல் செய்த பேராணை விண்ணப்பத்தின் மீது உச்சநீதிமன்றம் 15-04-2014 அன்று வழங்கிய மேன்மைமிகு தீர்ப்புரை, இவரின் தமிழ் மொழிபெயர்ப்பில்,’’நீளும் கைகள்”’, என்னும் நூலாக 2018 ல் வெளிவந்துள்ளது. அதே ஆண்டில் இரண்டாம் பதிப்பும் கண்டுள்ளது சிறப்பு.

. மணவை செந்தமிழ் அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவராக இருந்து, அதன் சார்பாக ஆண்டு தோறும் வழங்கப்படும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக் குழுவின் ஒருங்கிணைப்பாளாராகவும் செயலாற்றி வருகிறார்.

இந்த ஆண்டிலிருந்து வழங்கப்படவுள்ள சௌமா இலக்கிய விருதுக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

முழுவதும் கவிதை மற்றும் கவிதை குறித்தான கருத்தியல் முன்வைப்பென தன்னை பொருத்திக்கொண்டிருக்கும் தமிழ்மணவாளன், சில சிறுகதைகளே எழுதியிருப்பினும் இவர் எழுதிய பெண்ணிய நோக்கிலான ,’’எதிர் கொள்ளல்’’, சிறுகதை கல்கி சிறுகதைப்போட்டியில் தேர்வானதோடு மட்டுமன்றி கடந்த ஆண்டு வெளிவந்த சிறந்த கதைகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டு, பெருமை மிக்க இலக்கியச்சிந்தனை வெளியிட்ட தொகுப்பில் இடம் பெற்றது.

திரைப்படத் துறையிலும், உரையாடல் ஆசிரியராக பாடலாசிரியராக தன் பங்களிப்பினைச் செய்து வருகிறார். சமூகப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஆக்கப்பூர்வமான பல செயல்பாடுகளைத் தொடர்ந்துவருகிறார்.  

ஆதாரங்கள்


வெளி இணைப்புகள்

தமிழ்மணவாளன் கவிதைகள் திண்ணை


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya