தருண் விஜய்தருண் விஜய் , ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, இந்தியப் பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பஞ்சஜன்யா என்ற இந்தி நாளேட்டின் ஆசிரியரும் ஆவார். இவர் ஒரு சமூக ஆர்வலரும், இதழாளரும் ஆவார். 1986 - 2008 காலகட்டத்தில் இந்தியப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். தற்போது இந்தியாவின் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] இவர் காவி அலை (saffron surge) என்ற ஆங்கில நூலின் ஆசிரியர் .[2] சர்ச்சைநொய்டாவில் நைஜீரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்[3] தொடர்பாக அல் ஜசீரா தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில் ".. இந்தியர்களை இனவெறியர்கள் என்று கூறுவதில் நியாயமில்லை .தாங்கள் இனவெறியர்களாக இருந்தால், கறுப்பர்களான தென்னிந்தியர்களுடன் எப்படி இணைந்து வாழ்வோம்.தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் கறுப்பர்கள் நிறைந்துள்ளனர் .."[4] என்று கூறிய தருண் விஜய், தங்களை சுற்றி கறுப்பர்கள் இருந்தாலும் அவர்களுடன் இணக்கமாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்த கருத்து கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. சான்றுகள்
இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia