தாட்பூட்![]() தாட்பூட் (Passion fruit) என்பது பாசிஃப்லோரா குடும்பத்தைச் சேர்ந்த பல வகைகளான பழங்களாகும்.[1][2] தாட்பூட் பழங்களை மூன்று முக்கிய வகைகளாக பிரிக்கலாம்: ஊதா நிறப் பழங்கள் (Passiflora edulis சிம்ஸின் பழங்கள்), மஞ்சள் நிறப் பழங்கள் (Passiflora edulis F. flavicarpa டி.ஜி.) மற்றும் பெரிய கிரானடில்லா பழங்கள் (பாசிஃப்லோரா குவாட்ராங்கொலரிஸ் எல்). என்பனவாகும்.[3] இலங்கையில் இதனை கொடித்தோடை என்றழைப்பர். இதன் தாவரவியல் பெயர் பாசிபுளோரா எடுலிஸ் என்பதாகும். இது தென்பிரேசில் நாட்டைத் தாயகமாகக் கொண்டது. இது இமாசலப்பிரதேசம், கர்நாடகம், தமிழகத்தில் (நீலகிரி மலைப்பகுதி) பயிராகின்றது. பழுத்த பழம் ஊதா நிறத்துடனும், முட்டை உருவத்திலும் இருக்கும். மிகுதியான வெப்பமும், குளிருமுள்ள பகுதிகளில் இது நன்கு வளரும். விதைகள், வேர்விட்ட முதிர்ந்த தண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பழங்கள் மே முதல் செப்டம்பர் வரை அறுவடை செய்யப்படுகின்றன. ஆண்டொன்றுக்கு ஒரு கொடியிலிருந்து 60 முதல் 80 பழங்கள் வரை கிடைக்கும். மருத்துவப் பண்புகள்
படக்காட்சியகம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia